kambu kozukattai
kambu kozukattai

தேவையான பொருட்கள்
1கப் நாட்டுக் கம்பு
1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
4 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
2 சிறிதாக நறுக்கிய வரமிளகாய்
சிறிது கறிவேப்பிலை
சிறிது கொத்தமல்லி
2ஸ்பூன் தேங்காய்த் துருவல்
உப்பு

தாளிக்க

3 ஸ்பூன் நல்லெண்ணெய்
1/2ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுந்து

செய்முறை

கம்பை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மிக்ஸியில் ஊறிய கம்பை கரகரப்பாக தோசை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அடிகனமான வாணலியில் நல்லெண்ணெO ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து அதனுடன் வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து லேசாக பொன்னிறமாக வதக்கி உப்பு சேர்க்க வேண்டும்.

இவற்றுடன் அரைத்த மாவை சேர்த்து சிறுதீயில் கிளறவும். மாவு கெட்டியானதும் அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளவேண்டும். சற்று கைப்பொறுக்கும் சூட்டில் ஆறியதும்
கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் 10 நிமிடம் வேகவைக்கவும். சுவையான சத்தான கம்பு கொழுக்கட்டை தயார்.

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

கார சட்னி, தக்காளி சட்னி, எள் சட்னியுடன்
சுவையாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending