ஐ.பி.எல் 2021: சென்னை பெற்ற வெற்றி!

ipl2020-csk-mi
ipl2020-csk-mi

ஐ.பி.எல் 2021 – இரண்டாம் பகுதி -30ஆவது ஆட்டம் – சென்னை vs மும்பை

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை சூப்பர் கிங்ஸ் 7 ரன்னுக்கு 3 விக்கட் என்ற நிலையிலிருந்து வெற்றிக்கு சென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 156 க்கு 6 (கெய்க்வாட் 88 அவுட் இல்லை; மில்னே 2-21) மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் இழப்புக்கு 136 (திவாரி 50*, டி சாஹர் 2-19) 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி  முதலில் பேட்டிங் செய்தது. பவர்பிளே முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்தது, மேலும் அம்பதி ராயுடு காயம் காரணமாக கூடுதலாக ஓய்வு பெற்றார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்து, 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் எடுத்து சென்னை அணியை 6 விக்கட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுக்க வைத்தார்.

ரவீந்திர ஜடேஜாவுடன் (33 பந்துகளில் 26 ரன்), கெய்க்வாட் ஐந்தாவது விக்கெட்டுக்கு 64 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். இது கெய்க்வாட் மற்றும் பிராவோ (8 பந்துகளில் 23 ரன்), கடைசி நான்கு ஓவர்களில் 58 ரன்கள் எடுத்தது இரண்டும் சென்னை அணிக்கு 156 ரன்களைத் தந்தது.

மும்பை ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இல்லாமல் இருந்தது, ஆனால் 156 ரன் என்பது கடினமான இலக்கு இல்லை. தீபக் சாஹர் தலைமையிலான சூப்பர் கிங்ஸ் சீமர்கள், சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கட் எடுத்தனர். பத்தாவது ஓவரில் மும்பை 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது.

சௌரப் திவாரி மற்றும் ஸ்டாண்ட்-இன் கேப்டன் கியரான் பொல்லார்ட் சிறிது வெற்றியை அடைய விளையாடினர். ஆனால் ஜோஷ் ஹேசில்வுட் பொல்லார்டை எல்பிடபிள்யூவில் சிக்க வைத்தார், மும்பைக்கு 41 பந்துகளிலிருந்து 70 ரன் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் போட்டி முடிந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். இறுதியில், மும்பை திவாரி (40 பந்துகளில் அவுட் ஆகாமல் 50 ரன்) கடைசி வரை விளையாடியபோதும் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories