YouTube - 2026

you tube வீடியோவை பேக்ரௌண்டில் ஓட விட..!

லைஃப் ஸ்டைல் அடடே... அப்படியா? தொழில்நுட்பம்
YouTube - 2026

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு அப்டேட்டுகள் மூலமாக, பயனாளர்களுக்கான வசதிகளை யூ டியூப் நிறுவனம் மேம்படுத்தி வருகிறது.

இதற்கு முன்பு வெப்சைட்டில் மட்டுமே இருந்த யூ டியூப், ஆப் வடிவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அடுத்த கட்டமாக யூ டியூப் ப்ரீமியம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஏராளமான வசதிகள் மற்றும் கூடுதல் சிறப்பு வீடியோக்கள், விளம்பரம் இல்லாமல் பார்க்கும் வசதி போன்ற எண்ணற்ற சலுகைகளை, யூ டியூப் சப்ஸ்கிரிப்ஷன் செய்வதன் மூலமாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் சாதாரண யூசராக யூ டியூப் பயன்படுத்துபவராக இருந்தால், யூ டியூபில் ஒரு வீடியோ பிளே ஆகிக் கொண்டிருக்கும் சமயத்தில் வேறெந்த ஆப்களையும் நீங்கள் இயக்க முடியாது.

அதாவது, உங்கள் மனதுக்கு பிடித்த பாடல் ஒன்றை யூ டியூபில் கேட்டபடியே கேம் விளையாடுவது, ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற மற்ற சமூக ஊடகங்களை பார்வையிடுவது அல்லது எங்காவது சென்று கொண்டிருக்கும் சமயங்களில் ஃபோன் லாக் செய்து விட்டு பாட்டு கேட்பது, இப்படி நீங்கள் எதை திட்டமிட்டாலும் அது நடக்காது. ஸ்க்ரீனில் யூ டியூப் ஆப் இருந்தால் மட்டுமே அது பிளே ஆகிக் கொண்டிருக்கும்.

ஆனால், ப்ரீமியம் யூசர்களுக்கு மட்டும் யூ டியூபை பேக்ரவுண்டில் இயக்கிக் கொண்டு, மற்ற ஆப்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

பேக்ரவுண்டில் பிளே செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அதை சப்ஸ்கிரிப்ஷன் செய்பவர்கள் ஏராளம் இருக்கின்றனர்.

இதற்கு மட்டும் தான் என்றால், இனி கவலை வேண்டாம். உங்களுக்கு பிடித்தமான மற்ற ஆப்களையும் இயக்கியபடி யூ டியூப் தளத்தையும் பார்வையிடுவது எப்படி என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்கள் ஆண்டிராய்டு ஃபோன் அல்லது ஐஃபோனில் இன்டர்நெட் பிரவுசர் ஓப்பன் செய்யவும்.

இதில், யூ டியூப் தளத்தை திறந்து கொள்ளவும்.

நீங்கள் ஃபோனில் பயன்படுத்தினாலும் கூட, வெப் வெர்ஷன் முறையில் பிரவுசிங் செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் செட்டிங்க்ஸ் இல், மோர் மெனு என்பதில் டெஸ்க்டாப் வியூ தேர்வு செய்வதன் மூலம் இது சாத்தியம் ஆகும்.

இப்போது உங்களுக்கு விருப்பமான வீடியோவை பிளே செய்துவிட்டு, பிரவுசரை மினிமைஸ் செய்து வைக்கலாம்.

ஆண்டிராய் ஃபோனில் இப்போது நோட்டிஃபிகேஷன் பார் சென்று பிளே வீடியோ கொடுக்கலாம். ஆப்பிள் ஃபோன் என்றால் கண்ட்ரோல் செண்டர் சென்று பிளே செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.