என்ன கோவமோ? தோசைக்கல்லை வீசி இயக்குனர் நெத்தியைக் கிழித்த அஞ்சலி!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
anjali1 - 2026

ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் பட இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் லிசா 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்சன் ஹீரோயினாக அஞ்சலி நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். ஏமாலி படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர்  திரைப்படம் லிசா. இப்படத்தின்  சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது 3டி எஃபெக்ட்டில் தோசைக்கல்லை தூக்கி கேமரா முன் அஞ்சலி வீசவேண்டும், ஆக்ஸன் என்றதும் எதிர்பாராத விதமாக தோசைக்கல் பறந்து வந்து கேமரா அருகில் நின்ற இயக்குனரின் நெத்தியில் பட்டு புருவம் கிழிந்தது.

ரத்தம் வழிய வலியைப் பொருட்படுத்தாமல் அந்த ஷாட் எப்படி வந்துள்ளது என பார்த்த இயக்குனர் 3டி பிரமாதமா வந்திருக்கு என சொல்லிவிட்டு பிறகுதான் மருத்துமனைக்கு சென்றுள்ளார். நெத்தியில் தையல் போட்டு திரும்புவதற்கு நேரமாகி விட்டதால் அன்று படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது.

இந்தப் படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே மிகமுக்கிய கதாப்பாத்திரத்தில் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். மறைந்த நடிகர் ரகுவரனின் இடத்தை இவர் தமிழில் பிடிப்பார் என தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.