spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஐ.எஸ்.,அமைப்புக்கு ஆள்சேர்த்த பெண் யாஸ்மினுக்கு 7 ஆண்டு சிறை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

ஐ.எஸ்.,அமைப்புக்கு ஆள்சேர்த்த பெண் யாஸ்மினுக்கு 7 ஆண்டு சிறை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

- Advertisement -

கேரளத்தில் ஐஎஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண் யாஸ்மினுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். என்ற இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் தங்கள் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக இவர்களது ஆதரவாளர்கள் பல்வேறு நாடுகளிலும் இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஐ.எஸ். அமைப்பில் சேர்த்து வருகிறார்கள்.

இவ்வகையில், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கேரளத்தில், ஐஎஸ்.,ஸின் நடவடிக்கைகள் அதிக அளவில் உள்ளன. லவ் ஜிஹாத் மூலமும், அடாவடி மதமாற்றம் மூலமும் இஸ்லாத்துக்கு பலரை மாற்றி வருகின்றனர். கேரளத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மெஜாரிடியாக உள்ளதால், இந்துக்கள் அங்கே மைனாரிடிகளாக மாறி வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பலரும் ஐ,எஸ்., ஆதரவு நபர்களால் மூளைச் சலவை செய்யப் பட்டு, ஆள்பிடிக்கும் வேலைகளில் பகிரங்கமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி, பலரும் வளைகுடா நாடுகளுக்கு அழைத்துச் செல்லப் படுவது போல் கூறி, ஐஎஸ்., பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.

கேரளத்தில் காசர்கோடு, கண்ணூர், பாலக்காடு உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு என்.ஐ.ஏ., அதிகாரிகள் கேரளாவில் விசாரணை நடத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

கேரளாவில் இருந்து பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தவர்கள் குறித்தும் பட்டியல் தயாரித்து, அவர்களைத் தேடி வருகிறார்கள். என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையில் கிடைத்த தகவலின்படி இதுவரை 98-க்கும் மேற்பட்ட கேரளத்தவர்கள் ஐ.எஸ். பயங்கவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்டனர் என்றும், அவர்களில் 38 பேர் வரை போரில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதனால், கேரளாவில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பவர்களைக் கைது செய்து வருகிறார்கள்.

பண்டைய திருவாங்கூர் ராஜ்ஜியமாக இருந்த தென் கேரளத்தில் இதன் தாக்கம் அதிகம் இல்லை என்றும், கொச்சின் மற்றும் மலபார் பிரதேசமாக இருந்து கேரளத்தில் இணைந்த வட கேரளப் பகுதியில்தான் ஐ.எஸ்., ஆள்சேர்ப்பின் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் கூறப் படுகிறது. அவ்வகையில், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 15 இளைஞர்கள் கேரளாவை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தானுக்கு சென்று அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் பிடித்துக் கொடுத்த, யாஸ்மின் முகம்மது சாகித் என்ற பெண்ணை கைது செய்தனர்.

பீகாரைச் சேர்ந்த இவர், கேரளத்தில் இருந்து கொண்டு, இந்த வேலையைச் செய்துள்ளார். இவர் கேரளாவில் இருந்து தில்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் யாஸ்மின் முகம்மது சாகித்துக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து யாஸ்மின் முகம்மது சாகித் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை 3 ஆண்டுகளாகக் குறைத்தது.

இதை அடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதே போல், யாஸ்மின் தரப்பிலும் தனக்கு விதித்த சிறைத் தண்டனை குறித்து மேல்முறையீடு செய்யப் பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் யுயு லலித், இந்து மல்ஹோத்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு, யாஸ்மின் முகம்மது சாகித்துக்கு ஏற்கெனவே என்.ஐ.ஏ. நீதிமன்றம் வழங்கிய 7 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து, தீர்ப்பு வழங்கியது.


In the Kerala ISIS recruitment case, the Supreme Court today upheld the conviction of Yasmeen Mohammad Zahidi under Section 120B of Indian Penal Code and Section 38 of Unlawful Activities (Prevention) Act (UAPA). The Court also restored the order of NIA Court with respect to the sentence of seven years rigorous imprisonment handed down to Zahidi.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe