வில்லனுக்கு ஐ லவ் யூ மெசேஜ் அனுப்பிய பெண் தயாரிப்பாளர்..!

Published:

Thodraa PrithviRajan Veena M S Kumar 7 - 2026

ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித் துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில்,வீணாவின் அண்ணனாக, படத்தை தாங்கி கொண்டுபோகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுக மாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் தான்..

இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோரும் நடித்துள்ளனர். உத்தமராசா இசையமைத்துள்ளார்.. வி.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இதில் ராஜேஷ் கண்ணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா, டெக்ஸ்டைல் பிசினஸ் நடத்தி வருபவர். தனது காதல் கணவர் எம்.எஸ்.குமார் மனதில் கனன்று கொண்டிருந்த நடிப்பு ஆசையை நிறைவேற்ற சினிமா பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார். துணி பிசினஸில் உடனுக்குடன் லாபம் பார்த்துவந்த இவருக்கு, சினிமாவில் கேட்க கேட்க பணத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும் ஒன்வே விஷயம் அவ்வப்போது டென்ஷனை ஏற்றிவிடுமாம்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

உடனே கோபமாக கத்த ஆரம்பிக்கும் அவரை, அவரது கணவர் எம்.எஸ்.குமார் கூல் பண்ணும் டெக்னிக்கே அலாதியானது. அவர் கோபமாகும் சமயத்தில் அவருக்கு பிடித்த சாமி பாடலை பாட ஆரம்பித்தால், உடனே கோபம் தணிந்து படப்பிடிப்புக்கு தேவையான பணத்தை கொடுத்து விடுவாராம்.

ஆனால் இந்த கோபமெல்லாம் முழுப்படத்தையும் தயாரிப்பாளர் சந்திரா பார்க்கும் வரையில் தான்.. கணவர் ஊரில் இருக்கும்போது இங்கே படத்தை பார்த்த சந்திரா, அதில் தனது கணவரின் நடிப்பை பார்த்துவிட்டு தனது கணவருக்கு ‘ஐ லவ் யூ’ என மெசேஜ் அனுப்பினாராம்.

இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..? தனது காதல் கணவரிடம் இந்த பனிரெண்டு வருடத்தில் ஒருமுறை கூட ஐ லவ் யூ சொல்லியிராத இவரை, கணவரின் நடிப்பு ‘லவ் யூ’ சொல்லும் அளவுக்கு பிரமிக்க வைத்துவிட்டதாம்.

இதில் என்ன பியூட்டி என்றால் கணவரின் ஆசையை நிறைவேற்ற படம் தயாரித்தாலும் கூட, கணவரை ஹீரோவாகத்தான் நடிக்க வைப்பேன் என அவரும் பிடிவாதம் காட்டவில்லை. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அவரும் அடம் பிடிக்கவில்லை.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

Related articles

Recent articles

spot_img