நம்பி நாராயணன் மீதான அவதூறின் பின்னுள்ள அரசியல்!

nambi narayanan isro - 2026

உண்மையான இந்தியனாக இத்தேசத்திற்காக பாடுபட்டால் உனக்கு 10 பைசா தேறாது, மாறாக கடும் அவமானங்களை சந்திக்க நேரும். அது எவ்வளவு பெரும் விஞ்ஞானியாக இருந்தாலும் சரி

ஆனால் தேசத்தை எதிர்த்து பிரிவினை பேசினால் அமெரிக்காவில் அழைத்து டாக்டர் பட்டம் கொடுப்பார்கள், ஜெர்மனில் அழைத்து விருந்து கொடுப்பார்கள், இட்சூ காரில் செல்லலாம், அமெரிக்க தூதர் சென்னையில் வீடு வந்து சந்திப்பார்” என்பதெல்லாம் இங்குள்ள விதி இந்நாட்டின் மாபெரும் சாபக்கேடு இது, தேசதுரோகிகள் எல்லாம் அரசியல்வாதி முற்போக்கு புரட்சி இன்னபிற பெயரில் வாழ்வாங்கு வாழ்வார்கள். நாட்டுக்காய் உழைத்தவனோ எங்கோ இருந்து அழுதுகொண்டிருப்பான் இந்த இந்திய விதிக்கு அந்த பெரும் விஞ்ஞானியும் தப்பவில்லை, அவர் பெயர் நம்பி நாராயணன்

1995களில் மாலத்தீவு அழகிகள் வழியாக இந்திய விண்வெளி ரகசியத்தை கடத்தினார் என கேரள போலிசாரால் கைது செய்யபட்டு, அடிக்கபட்டு கோர்ட்டில் நிறுத்தபட்டு சொல்லணா சித்திரவதைகளை சந்தித்து இன்று தன் கரங்களும், தன் மனமும் சுத்தமானது என உச்ச நீதிமன்றத்தில் நிரூபித்திருப்பவர் தேசம் இன்று கண்ணீரொடு அவரை வணங்கி கொண்டிருக்கின்றது நாட்டுபற்றாளர்கள் எல்லாம் அந்த மனிதனுக்காக கண்ணீரோடு கைதட்டிக் கொண்டிருக்கின்றார்கள்

நம்பி நாராயணன், நெல்லை மாவட்டத்து அறிவு சுடர். அப்பொழுதே மிக கடினமான விண்வெளி பாடங்களில் அசத்தி இஸ்ரோ பக்கம் வந்தவர், அமெரிக்காவில் அவருக்கு மிக பெரிய எதிர்காலம் இருந்தபொழுதும் பிரான்ஸ் கம்பெனிகள் குனிந்து நின்று வரவேற்றபொழுதும் என் தேசம் இந்தியா, என் பணி இந்நாட்டிற்கே என வைராக்கியமாக இங்கே சேர்ந்தவர் நிச்சயமாக சொல்லலாம், கலாம் போலவே அப்பழுக்கற்ற விஞ்ஞானி

ஆனால் என்ன நடந்தது?

அக்காலங்கள் இன்று ஈரானை குறிவைத்திருப்பது போல இந்தியாவினை முடக்கியே தீருவது என அமெரிக்கா கங்கணம் கட்டிய 1980கள், இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறி கொண்டிருந்தது அவர்களுக்கு பொறுக்கவில்லை

இந்தியா கிரையோஜெனிக் எந்திரத்தை வாங்க ரஷ்யாவிடம் முயற்சித்தது, காரணம் அதுதான் எடை கூடிய செயற்கைகோளை விண்ணுக்கு கொண்டுசெல்ல கூடிய தொழில்நுட்பம், கூடவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகளையும் தயாரிக்கலாம் விடுமா அமெரிக்கா 1980கள் அமெரிக்காவின் அட்டகாசம் உச்சத்தில் இருந்த காலம், இந்தியாவோ இந்திராவினை இழந்திருந்தது, ராஜிவினையும் தொடர்ந்து இழந்தது, சோவியத் யூனியனும் உடைந்தது

இந்தியாவிற்கு கிரையோஜெனிக் நுட்பம் கிடைக்காமல் குறி வைத்து அடித்தது அமெரிக்கா, ரஷ்யாவின் போரிஸ் எல்சினை மிரட்டியது, பிரான்ஸ் ஒதுங்கியது இந்தியாவில் நாமே தயாரிப்போம் என விஞ்ஞானிகள் முடிவு செய்தனர், அந்த குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்தான் நம்பி நாராயணன்

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

கிரையோஜெனிக் நுட்பத்தினை அவர் அட்டகாசமாக வடிவமைத்தார் தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி காத்திருந்தது பின்னாளிலும் நம்பி நாராயணன் கொடுத்த அடித்தளத்தில்தான் இந்தியா கிரையோஜெனிக் எந்திரத்தை செய்து ஏராளமான செயற்கைகோளை எல்லாம் விண்ணுக்கு அனுப்பி கொண்டிருக்கின்றது)

விடுவார்களா வல்லரசுகள்? மாலத்தீவின் இரு பெண்கள் சில நாட்டு உளவு அமைப்பு மூலம் தயார் செய்யபட்டு நம்பி நாராயணனை சிக்கலில் ஆழ்த்தினர் அவர் விண்வெளி ரகசியத்தை கடத்தினார், பாகிஸ்தானுக்கு விற்றார் என பெரும் குற்றசாட்டுகள் வெடித்தன‌ ஒரு பெரும் விஞ்ஞானியினை, அதுவும் உலகதரம் வாய்ந்த கிரையொஜெனிக் எஞ்சின் செய்யும் பெரும் விஞ்ஞானியின் மீதான குற்றசாட்டை மத்திய அரசு எவ்வளவு கவனமாக கையாண்டிருக்க வேண்டும்?

ஆனால் அன்றைய அரசு செய்யவில்லை, ஏன் என்று தெரியவில்லை. கண்டும் காணாமல் இருந்தார்கள். அப்பொழுதுதான் இந்தியா உலக நாடுகளுக்கு திறந்துவிட பட்டது. மன்மோகன் சிங்கினை உலகின் சிறந்த நிதி அமைச்சர் என்றேல்லாம் விருது கொடுத்தார்கள் அதை ரசித்துகொண்டிருந்த மத்திய அரசு கொஞ்சமும் நம்பி நாராயணனை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் மகா கேவலம் ஆம், ராஜிவிற்கு பின் இத்தேசம் அப்படி பன்னாட்டு சக்திகளிடம் சிக்கி கிடந்தது நம்பி நாராயணன் அவமானபட்டபொழுது மத்திய அரசு பார்த்துகொண்டிருந்ததே தவிர , ஒரு ஆறுதலும் சொல்லவில்லை

நம்பி நாராயணன் தன் தரப்பு நியாயத்தை சொல்ல கூட வாய்ப்பு கொடுக்கப் படவில்லை. நம்பி நாராயணை கைது செய்தது கேரள காங்கிரஸ் அரசு, அதன் முதல்வர் அன்று கருணாகரன் நம்பி நாராயணன் கடுமையாக தாக்கபட்டதும் பெரும் சித்திரவதைகளை கேரள போலிஸ் கொடுத்ததும் இத்தேசத்தின் கருப்பு பக்கங்கள நம்பி நாராயணன் உண்மையில் அப்பாவி, அவர்கள் குறி அவருக்கும் மேல் அதிகாரியான முத்துநாயகம் என்பவர் மேல் இருந்தது. அதாவது மொத்த இந்திய கிரையோஜனிக் திட்டத்தையும் முடக்க ஏதோ ஒரு சக்தி கொடுத்த அழுத்ததிற்கு இத்தேசத்தின் அரசியல் ஆடியது ஆயினும் கொஞ்சமேனும் நாட்டுபற்றாளர்கள் உள்ள தேசமல்லவா இது? எதிர்ப்பு கிளம்பியது கேரளம் கொந்தளித்தது கருணாகரன் பதவி இழந்தார்

விஷயம் சிபிஐக்கு மாற்றபட்டது, சிபிஐ நம்பி நாராயணன் மேல் எந்த தவறும் இல்லை, இது கேரள காவல்துறையினரின் சதி என சொல்லிவிட்டது நம்பி நாராயணனுக்கு 1 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க சொன்னது கோர்ட் ஆனால் கேரள அரசு கொடுக்கவில்லை. அவர்கள் 1 சொட்டு நீரே கொடுக்காதவர்கள்? நஷ்ட ஈடா கொடுப்பார்கள்?

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

தன் மேல் தவறில்லை என்ற தீர்ப்பு வந்தவுடன் நிம்மதியான நம்பி நாராயாணன் கேரள காவல்துறை மேல் வழக்கு தொடர்ந்தார் நேற்று உச்சநீதிமன்றம் கேரள அரசு செய்த முறையற்ற விஷயத்திற்காக, நம்பி நாராயணன் மீது செய்த கொடுமைக்காக 50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தீர்ப்பிட்டுள்ளது

இவ்வளவு நாளும் தான் நடத்திய போராட்டத்தில் வென்றிருகின்றார் நம்பி, அவரின் நேர்மை வென்றிருக்கின்றது இப்பொழுது காரி துப்பி இத்தேசமக்கள் இந்திய அதிகார வர்க்கத்தை கேட்கும் கேள்வி ஒன்றுதான்

அமெரிக்கா சென்றால் பல பில்லியன்கள் சம்பாதிக்க வாய்பிருந்தும், வெறும் சில ஆயிரங்களுக்காக அம்மனிதன் இந்த நாட்டின் விண்வெளி திட்டத்தில் பங்கெடுத்திருக்கின்றார். ஆனால் அடிப்படையற்ற குற்றசாட்டில் அவரை கைது செய்து அடித்தெல்லாம் இருக்கின்றார்கள், இதெல்லாம் ஏன் முதலிலே கண்டிக்கப் படவில்லை

சரி சிபிஐ விசாரணை 1998ல் முடிந்தாலும் 2018வரை அவருக்கான நீதியினை கிடைக்கவிடாமல் செய்த சக்தி எது? அவரின் பெரும் போராட்டத்தால் நிச்சயம் இந்திய விண்வெளிதுறை பின்னடைந்திருகின்றது, கிரையோஜெனிக் இஞ்ச்னினின் தொடக்கத்தில்தான் நாம் இருக்கின்றோம், இன்னும் முன்னேற வேண்டும் ஒரு மாபெரும் விஞ்ஞானியினை 25 ஆண்டுகள் அழ வைத்ததில் இத்தேசத்தின் விண்வெளி ஆராய்ச்சிக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கின்றது?

இன்று ஓரளவு கிரையோஜெனிக் எஞ்சினை செய்து சாதிக்கின்றோம் என்றால் அதற்கு நம்பி நாராயணன் காரணம் என்பது யாருக்கு தெரியாது, அம்மனிதனுக்கான நீதி இவ்வளவு தாமதமா ஒரு மாபெரும் விஞ்ஞானிக்கே நீதி கிடைக்க செய்யாமல் மலையாளிகளால் லாபி செய்ய முடியும் என்றால் இத்தேசத்தில் என்ன நடக்கின்றது? ஒரு நம்பி நாராயணன் அழுது முடித்திருக்கின்றார், இன்னும் எத்தனை பேர் அழுதுகொண்டிருப்பார்கள் என யாருக்கு தெரியும்?

50 லட்சம் நஷ்ட ஈடு என்பது ..கு சமம், அம்மனிதன் நாளையே விமானம் ஏறினால் 1 மணிநேரத்தில் அவன் காலடியில் அது கொட்டி கிடக்கும், அவரின் திறமை அப்படி அந்த நஷ்ட ஈடு எல்லாம் போதாது இத்தேசத்து மொத்த மக்களும், கட்சிகளும் அரசும், நீதிதுறையும், அந்த மனிதன் மேல் பழிசுமத்தும் பொழுது பார்த்து கொண்டிருந்த விண்வெளி அதிகாரிகளும் மொத்தமாய் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

அவருக்கு நல்ல பதவிகளை மறுபடியும் விண்வெளி மையத்தில் கொடுத்து பிராயசித்தம் தேடட்டும்

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அவரை திட்டமிட்டு கைது செய்து அந்நிய நாட்டின் ஏவல் துறையான கேரள காவல் துறை அதிகாரிகளான மாத்யூஸையும், ஜோசுவா என்பவனையும் பிடித்து திகாரில் அடைக்கட்டும்

எங்கள் அன்புக்கும் நன்றிக்கும் உரிய நம்பி நாராயணன் அவர்களே இத்தேசம் உங்களுக்கு செய்த மாபெரும் அநீதிக்காக இந்தியர்கள் உங்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்

இந்த அயோக்கியர்களுக்காகவும் அவர்கள் செய்த கொடுமைகளுக்காகவும் இத்தேசத்தையும் அதற்கு நீங்கள் ஆற்ற இருந்த கனவுகளையும் மறந்துவிடாதீர்கள் மீண்டும் வாருங்கள், இன்னொரு கலாமாய் உங்களை இத்தேசம் வரவேற்கின்றது கிரையோஜெனிக் விஷயங்களில் இத்தேசம் போக வேண்டிய தூரங்களை கடக்க உதவுங்கள் எம் மாணவர்கள் உங்களை படிக்கட்டும், இத்தகைய சோதனைகளை கடந்தும் நாட்டிற்காக ஒருவன் உழைத்தான் என வரலாறு எழுதட்டும்

அவர்களில் இருந்து பல நம்பி நாராயணன்கள் உருவாகட்டும், தேசம் நிலைக்கட்டும் இத்தேசத்தின் நலனுக்காக அந்நிய நாட்டு கைகூலிகளால் நீங்கள் பட்ட பெரும் அவமானம் துடைக்கபட்டிருகின்ற நேரத்தில் எழுந்து வாருங்கள் தேசாபிமான மிக்கோர் உங்களுக்காக நன்றி கண்ணீர் விட்டு உங்களை வரவேற்கின்றோம்

நெல்லை மாவட்டத்து தமிழனுக்கு 25 ஆண்டுகாலமாக பெரும் அநீதி நடந்தது, ஒரு குரலாவது இங்கு தமிழனுக்கு அநீதி என கேட்டதா என்றால் இல்லை இதுதான் தமிழகத்து கட்சிகளின், தமிழனை காக்க உதித்தவர்களின் அரசியல் புத்தி ஏன் என்றால் நாட்டுக்காக உழைக்கும் எந்த தமிழனையும் இவர்களுக்கு பிடிக்காது, பெரியார், பிரபாகரன் என பேசினால் ஓடிவந்து தாங்குவார்கள் இங்குள்ள யதார்த்தம்

அப்படி இந்த மாபெரும் விஞ்ஞான தமிழனுக்கு ஆதரவாக குரல் வராத தமிழகத்தில் அந்நிய நாட்டு கொலைகாரர்களை விடுவி, சந்தணமரம் வெட்டிய தமிழனுக்கு அநீதி என குரல்கள் அடிக்கடி வரும்

நாம் கண்டிப்பது இந்த அயோக்கியதனத்தையே

தமிழன் நம்பி நாராயணனை இங்குள்ள கட்சிகளும் தமிழன் தமிழன் என கத்துபவனும் கைவிட்டதுதான் தமிழக அரசியலின் அசிங்கமான முகம் இனியாவது தமிழகம் திருந்தி நல்ல தமிழருக்கு ஆதரவாக திரும்பட்டும்

-கருத்துக் கட்டுரை: பிரகாஷ் எம்.ஸ்வாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories