படம் பாக்க டிக்கெட் வாங்கினா ஒரு கைலி இலவசம்! ‘களவாணி சிறுக்கி’ தயாரிப்பாளரின் உத்தி!

Published:

Kalavaani Sirukki 14 - 2026ராணா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர்கள் சாமி ,திவாகர் ,அஞ்சு நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் களவாணி
சிறுக்கி

கிராமத்தில் படித்துவிட்டு வீட்டில் இருக்கும் கஸ்தூரியை ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தாய் மாமா மருதுவிற்கு திருமணம் செய்துவைக்க கஸ்தூரியின் அம்மா ஏற்பாடு செய்கிறார் இந்நிலையில் அதே ஊரில் கறிக்கடை நடத்தும் பாண்டி என்பவனும் கஸ்தூரிக்கு மாமன் என்பதால் கலயாணத்தில் பிரச்சனை வருகிறது பாண்டியும் நான் தான் கஸ்தூரியை திருமணம் செய்வேன் என சவால்விட்டு செல்கிறான் .கஸ்தூரியிடம் டியூஷன் படிக்கும் கதிர் என்பவனுக்கு இவளை எப்படியாவது அடையவேண்டும் என்ற ஆசை உள்ளது .

Kalavaani Sirukki 15 - 2026

அதே நேரத்தில் அந்த ஊரிற்கு வரும் டாக்டர் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கு காதல் மலர பல பிரச்சனைகளுக்கு நடுவில் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கு கல்யாணம் நடைபெறுகிறது .முதலிரவு நேரத்தில் அரவிந்த் இறந்துவிட, அரவிந்தை கொன்றது மருதுவா, கதிரா என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம் தான் களவாணி சிறுக்கி

இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் 5 ம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

Kalavaani Sirukki 19 - 2026

ரசிகர்கள் கூட்டம் இப்போது திரையரங்கில் குறைந்து கொண்டு வருவதை அறிந்த இப்பட தயாரிப்பாளர் புது உத்தி ஒன்றை கையாளப் போகிறார். படம் வெளியாகும் 5,6,7 ஆகிய தேதிகளில் காலை காட்சிக்கு மட்டும் திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட்க்கு ஒரு விலையுர்ந்த 143 பிராண்ட் கைலி ஒன்றை பரிசாக தர திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் R.நமச்சிவாயம் .

களவாணி சிறுக்கி ட்ரைலர்:

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img