சர்வ நாசத்துக்கு அடிகோலும்… சர்வ கட்சிக் கூட்டம்!

உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்

congressmeeting - 2026

வழக்கம் போல 21 கட்சித் தலைவர்களுக்கும் வயிற்றுக்குள் ஊறல் தோன்ற, நேற்று கும்பல் கூடி, மோடி அரசு தங்களிடன் கூடிப் பேசி முடிவெடுக்கவில்லை என்றும், தேச நிம்மதி சார்ந்த விஷயம் இதுவென்றும் ஒரு கூப்பாடு போட்டாச்சு. திருந்தாத ஜென்மங்கள்.

சரி நாளை காலை 3 30 மணிக்கு விமான தாக்குதல் என்று அரசு இந்த காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியை கூப்பிட்டு அவர்களுக்குச் சொல்லி இதை செய்திருக்க முடியுமா?

உடனே மணி சங்கர் பாகிஸ்தானுக்கு இதை தெரிவித்து லாபம் தேடிக் கொள்வார், கம்யூனிஸ்ட், இதை தடுத்திருக்கும். ஒரு அரசு எப்படி இதை சொல்லி செய்திருக்க முடியும்? நம் பாரம்பரியமான எதிர் கட்சிகள் இதை வரவேற்கவே செய்யாதே!

உங்களை தாங்கிக்கொண்டிருக்கும் இந்த தேச மண்ணின் மீது உங்களுக்கு நன்றி இருந்தால், இந்த நேரத்தில் இதை அரசியல் ஆக்காமல் அனைத்து கட்சியும் ஒரு அரசியல் கட்சி என்பதாக இல்லாமல், இந்திய குடியுரிமை பெற்ற மக்களாக அல்லவா நாம் இருத்தல் வேண்டும். இதில் அரசும் லாபம் தேடாமல் இருத்தல் அவசியம், அதை இன்று வரை மோடி அரசு செய்கிறது. நேற்று மோடியே அறிக்கை கொடுத்து இருக்கிறார், இதை அரசியலாக்கி அதிகம் பேசி லாபம் தேடக்கூடாது என்று.

பாகிஸ்தானை விட பெரிய எதிரிகளுடன் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தான் நம் சாபக்க்கேடு.

இதோ இம்ரான் கான் பேசுகிறார் வீடியோவில், அவர் என்ன திருந்திய நிலையிலா பேசுகிறார், இதோ பார், உங்க ஆளு ஒருத்தன் எங்க கிட்ட மாட்டிக்கிட்டார், அதனால் நீ பேச வா, என்ற தொனியில் தானே பேசுகிறார்.

அவருக்கு அப்படி உண்மையிலேயே நல்ல எண்ணம் இருந்தால், இதோ இவர் எங்களிடம் சிக்கியவர், இவர் நலமாக இருக்கிறார், நாங்கள் இவரை விடுதலை செய்கிறோம், நாம் பேசலாம், தீவிரவாதம் இல்லாமல் இருக்க வழி செய்யலாம் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

உடம்போடு ஒட்டிய சதையை பிய்ப்பது போல தான் பாகீஸ்தானிடம் இருந்து நல்ல எண்ணம் என்பது பிறப்பது.

ஜெனிவா ஒப்பந்தப்படி அபினந்தன் நிச்சயம் நல்லபடியாக வருவார் என்பதற்கு கடைசியில் அந்த வீடியோ உதவப் போகிறது என்பது தான் Blessing in disguise .

மக்களாகிய நாம் சற்று சிந்தித்து பார்த்து, இப்படி தேசத்துக்கு பின்னால் நிற்காமல் அதையும் அரசியலாக்கிப் பேசும் மனிதர்களையும் கட்சிகளையும் ஒதுக்கி வைக்க வேண்டும்.

70 வருடம் முன்பு நம் மூத்த அரசியல் தலைவர்கள் செய்த சில பிழைகளால் இன்றும் நமக்கு நிம்மதி இல்லை, ஆனால் இன்று நாம் எடுக்க இருக்கும் உறுதியான முடிவின் நிலைப்பாட்டில் இன்னும் 50 வருடம் கழித்து வாழப்போகும் நம் சந்த்தியினர்க்கு நிம்மதி அவசியம் என்று தீர ஆலோசித்து, இன்று அரசு எடுக்க இருக்கும் தீவிரவாத ஒழிப்புக்கு நாம் அனைவரும் நிச்சயம் அரசை பாராட்டி அரசுக்கு ஆதரவு கொடுப்பது என்பது வெகு அவசியம்.

– ரங்க நாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.