பறையர் எனும் தொல்குடி!

rajaraja cholan - 2026

சும்மா எதற்கெடுத்தாலும் இரண்டாயிரம் வருடமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வாதத்தை முன் வைப்பது நகைப்புக்குரியது.அதற்கு ஏதாவது முகாந்திரம் வேண்டாமா? உதாரணமாக பறையர்கள் எப்போது தாழ்ந்தவர்களாக குறிக்கப்படுகிறது? என்பதை சொல்ல முடியுமா?

சங்கப்பாடலில் மாங்குடி மருதனார் எழுதிய பாடல் சொல்கிறது “துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று இந்நான் கல்லது குடியும் இல்லை” என்று. வாகைத்திணையில் பாடப்பட்ட பாடல் இது வாழ்வின் வெற்றிகரமான பக்கத்தை சொல்லும் திணை அதில் மூதின் முல்லை துறையில் சொல்கிறார்.

அந்த முதுமக்களின் பூக்கள்,உணவு,குடிகள் என எல்லாவற்றையும் புகழ்ந்துவிட்டு இவர்கள் அனைவரும் வணங்குவது நடுகல்லான வீரனையே.இதை விட வேறென்ன தெய்வம் உண்டு என்று புகழ்கிறார்.எனவே இது ஒரு தொல்குடிகளின் இணையற்ற வீரத்தை அவர்கள் வாழ்வை உயர்த்தி கூறும் பொருட்டே சொல்லப்படும் பாடல்.

ஆக இந்த குடிகளை தமிழ் நிலத்தின் தொன்மை மிக்க குடிகளாகவும் இவர்களுக்கு இணையில்லை என்றும் புகழ்கிற வண்ணம் உள்ளது.சங்க காலத்தில் பறையர்களை இழித்து பேசுவது இல்லை.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிற்கால சோழர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளிலும் பறையர்களை தீண்டாதவர்கள்,சண்டாளர்கள் என சொல்லும் சாட்சிகள் இல்லை
பறையர்கள் தனித்தனி சேரிகளில் வாழ்ந்தார்கள்.அது கீழ் மேல் என்பதாக இல்லை.பார்ப்பனச்சேரி,கம்மாளர்சேரி என்பது போலே பறைசேரியும் இருந்தது.”சேரி” என்ற வார்த்தை இன்று Slum என்பதோடு பொறுத்திப் பார்க்கப்படுகிறது.

அது தவறானது சேரி என்பது கூட்டுக்குடியிருப்பு என்பதாகவே வந்தது வெகு காலமாக. பறையர்கள் பல்வேறு பிரிவுகளாக தனக்குள்ளே இருந்தனர்.”உழுபறையன்” “காவாக்கார பறையன்” “ஊர்ப்பறையன்” “வள்ளுவப்பறையன்” என்று அழைக்கப்பட்டன.இதில் புல்லுபறிக்கிற பறையர்கள் தாழ்ந்தவர்களாக கருதினர் பறையர்களுக்குள்ளேயும்

அதே போல புலையர் என்பவர்களும்,ஈமச்சடங்கு செய்பவர்களும் தனியாக இருந்தனர்.இதில் புலைத்தொழில் மற்றும் ஈமச்சடங்கு செய்பவர்களையே சமூகம் ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

மற்றபடி எல்லோரையும் போல சொத்துரிமை இருந்தது. ‘ஊர்ப்பறையன் மண்டை சோமநாதன் ஏழிசை மோகப்படைச்சன்’ என்பவன் ராஜராஜசோழன்-1 காலத்தில் கோவிலுக்கு சந்தி விளக்கு நிவந்தம் கொடுத்துள்ளான்.கல்வெட்டுகளில்,கிராம தீர்மானங்களில் பறையர்கள் கையெழுதிட்டிருக்கிறார்கள்.

குலசேகர பாண்டியன் ஆட்சியில் திருமய்யத்தில் நீர்நிலை விற்பனை செய்யப்பட்டபோது அதற்கான விற்பனை தொடர்பான ஆவணத்தில் பெரியநாட்டுப்பறையன், கானாட்டுப் பறையன், ஐநூற்றுப் பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப் பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

கல்வெட்டு வடிக்கும் முன் ஓலையில் எழுதி கையெழுத்துவிடும் முறை இருந்தது.கையெழுத்து போடத் தெரியாதவர்கள் ஓலையில் எழுத்தாணியால் கீறி விடுவார்களாம் அதற்கு பக்கத்தில் அவருடைய பெயரை எழுதி ‘தற்குறி’ என்று எழுதுவார்களாம்.

அவர்களுடைய பெயர் எழுதி பின் தற்குறியிடம் கேட்டறிந்தேன் என்று வேறொருவர் கையெழுத்திடும் முறை உள்ளது.இதுதான் இன்றும் நாம் எழுதப்படிக்க தெரியாதவர்களை தற்குறி என்று அழைக்க காரணம்.

ஆக சிவபிராமணர்கள் கையெழுத்திட தெரியாத நிலையில் பறையர்கள் கையெழுத்திட்டிருந்தால் அவர்கள் எப்படி தாழ்த்தப்பட்டிருப்பார்கள்?

நாயன்மார்களாக,ஆழ்வாராக,ஈடுஇணையற்ற தமிழின் சொத்தான திருக்குறள் கொடுத்த வள்ளுவர்களாக இருந்தவர்கள் எங்களால்தான் மேலே வந்தார்கள் என்று சொல்வது யாரை ஏமாற்ற?

மிஷனரி,திராவிட போலிகளிடம் பறையர்கள் மயங்காமல் நாம் ஒரு மேன்மைமிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள். நாம்தான் இந்த தொல்பண்பாட்டின் கூறு என்று உணர வேண்டும் ????

  • ட்விட்டரில் சுந்தர்ராஜசோழன் என்பவர் எழுதிய பதிவு 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories