உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 314 ரன் குவிப்பு!

Published:

banVsInd - 2026

வங்கதேச அணியுடனான போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்தது!

முதலில் களமிறங்கிய இந்திய அணி துவக்கம் முதலே நன்கு ரன்களை சேர்த்து வந்தது! முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் ரோஹித் சர்மா இணை சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 170 ரன்களை சேர்த்தது! கேஎல் ராகுல் 92 பந்துகளில் 77 ரன் எடுத்தார்.

அடுத்து ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். அவர் 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அதில் ஐந்து சிக்சர்கள் 7 பவுண்டரிகள் அடங்கும்!

பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி 27 பந்துகளில் 26 ரன் எடுத்தார். ரிஷப் பண்ட் 48 ரன் எடுக்க ஹர்திக் பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றினார். தொடர்ந்து நடு வரிசையில் வந்த தோனி 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 8 ரன் எடுத்து ஏமாற்ற புவனேஸ்வர்குமார் 2 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார்!

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

முகமது ஷமி ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்தது!

இதையடுத்து 315 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேச அணிக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

Related articles

Recent articles

spot_img