ஆடி 18 – கிராமியத்தை கொண்டாட…

Published:

மேழிச் செல்வத்தைப் பொழியும்மண்மகளையும், கிராமியத்தையும் கொண்டாடுவோம்.

கிராமத்து தொழுவங்களில் 2,3 ஜதைகள் உழவு மாடுகள் (ஒரு ஜதை என்றால் இரண்டு உழவு மாடுகள்), பால் கறக்கும் பசு,எருமைகள் 8, செனை மாடுகள் 2 என 15, 20 மாடுகள் கட்டியிருக்கும் தொழுவத்தில் இன்றைக்கும் 2, 4 மாடுகளே உள்ளது. இல்லைஇல்லையெனில் சில சமயங்களில் ஒற்றை மாடுகள் கூட கட்டப்பட்டுள்ள காட்சியை பார்க்கிறோம். கலப்பைகள், மாட்டு வண்டிகள் பயன் பாட்டில் இல்லை.

இதுதான் உத்தமர் காந்தி விரும்பிய கிராம ராஜ்ஜியமோ?
Is it real India?

தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், கார்ப்பரேட்டுகளால் நாட்புற மண்வாசனையை இழந்தோம். ஒரு பக்கம் மண்வாசனையை இழந்துவிட்டு பூர்விக வரலாறுகளை பேசி என்ன பயனோ?

தற்சார்பு இயற்கை விவசாயமும், சுற்றுச்சூழலும் குறித்து சில ஆளுமைகள் தன்னலம் கருதாமல் களத்தில் நின்றாலும் சில சக்திகள் அவர்களை அழிக்கப் பார்க்கிறது. விவசாயமும், விவசாயத் தொழில்களும் என்றும் முடிவில்லாத சங்கிலித் தொடர்பான மண்சார்ந்த பணியாகும். விவசாயம்தான் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். எந்நாளும் நிலங்களை விற்றுவிடாதீர்கள். மண்மகளை காப்போம். ஆடு, மாடு என விவசாயக் கால்நடைகளை பாதுகாப்போம்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

மேழிச் செல்வத்தைப் பொழியும் மண் மகளையும், கிராமியத்தையும் கொண்டாடுவோம்.

கிராமியத்தை கொண்டாடுவோம்…

கிராமியம்

மண்மகள்

விவசாயம்

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img