பாரதி-100: கண்ணன் – என் சீடன்!

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு (பகுதி – 19) கண்ணன் – என் சீடன்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~

பாடலின் தொடர்ச்சி . . .

ஆடலும் பாடலும் கண்டுநான் – முன்னர்
ஆற்றங் கரையினில் கண்டதோர் – முனி
வேடந் தரித்த கிழவரைத் – கொல்ல
வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் – ‘சிறு
நாடு புரந்திடு மன்னவன் – கண்ணன்
நாளுங் கவலையில் மூழ்கினோன்; – தவப்
பாடுபட் டோ ர்க்கும் விளங்கிடா – உண்மை
பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?’ … 5

என்று கருதி யிருந்திட்டேன்; – பின்னர்
என்னைத் தனியிடங் கொண்டுபோய், – ”நினை
நன்று மருவூக! மைந்தனே! – பர
ஞான முரைத்திடக் கேட்பைநீ; – நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமலே – சிந்தை
ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் – அங்கு
விண்ணை யளக்கும் அறிவுதான்! … 6

சந்திரன் சோதி யுடையதாம்; – அது
சத்திய நித்திய வஸ்துவாம்; – அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் – நினைச்
சேர்ந்து தழுவி அருள்செயும் -; அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் – வந்த
மாயக் களிப்பொருங் கூத்துக்காண் -‘இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் – மடச்
சாத்திரம் பொய் யென்று தள்ளடா! … 7

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

”ஆதித் தனிப்பொரு ளாகுமோர்; – கடல்
ஆருங் குமிழி உயிர்களாம்; – அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு – தன்னைச்
சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; – இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே – அதன்
மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்;- வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே – ஒரு
நேர்மைத் தொழிலில் இயங்குவார்; … 8

”சித்தத்தி லேசிவம் நாடுவார், – இங்கு
சேர்ந்து களித்துல காளுவார்; – நல்ல
மத்த மதவெங் களிறுபோல் நடை
வாய்ந்திறு மாந்து திரிகுவார்; – ‘இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே – எந்தை
நீண்ட திருவரு ளால்வரும் – இன்பம்
சுத்த சுகந்தனி யாநந்தம்’ – எனச்
சூழ்ந்து கவலைகள் தள்ளியே, … 9

‘சோதி அறிவில் விளங்கவும் – உயர்
சூழ்ச்சி மதியில் விளங்கவும் – அற
நீதி முறைவழு வாமலே – எந்த
நேரமும் பூமித் தொழில்செய்து – கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் – பிறர்
உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே – இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் – பெண்மை
மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில், … 10

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

”ஆடுதல், பாடுதல், சித்திரம் -கவி
யாதி யினைய கலைகளில் – உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் – பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார் – அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் – சில
நாளினில் எய்தப் பெறுகுவார் – அவர்
காடு புதரில் வளரினும் – தெய்வக்
காவனம் என்றதைப் போற்றலாம். … 11

”ஞானியர் தம்மியல் கூறினேன் – அந்த
ஞானம் விரைவினில் எய்துவாய்” – எனத்
தேனி லினிய குரலிலே – கண்ணன்
செப்பவும் உண்மை நிலைகண்டேன் – பண்டை
ஈன மனிதக் கனவெலாம் – எங்ஙன்
ஏகி மறைந்தது கண்டிலேன்; – அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! – அதன்
ஆட லுலகென நான் கண்டேன்! … 12

பாடலின் விளக்கத்தை நாளை காணலாம்...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories