ஞாயிற்றுக் கிழமை! சோம்பல் தினம்! வாரத்தில் ஒரு நாளேனும்..?! ம்ஹும்.. இயலவில்லை! எனக்காக… எத்தனை வேலைகள் காத்திருப்பில்! ஆனால்…நானோ உனக்காக… எத்தனை வேளைகள் காத்திருப்பில்! ஆதவன் உச்சியைக் கடந்து மேற்கில் சாய்கிறான்..! அமிலம் வயிற்றில் சுரந்து அகோரப்பசி என்கிறது! ஆனாலும்… நான் இன்னும் இடம் விட்டு எழவில்லை வலம் ஒன்றும் செய்யவில்லை! சமைக்கத் தோன்றவில்லை… சாப்பிடவும் தோன்றவில்லை… தலைசாய்க்கவும் எண்ணமில்லை! என்ன செய்வது..? அலை மோதும் உன் நினைவுகள் அவை போதும் என் உணவுகள்..!
Published:

