கஷ்டங்கள் நமக்கு ஏன் வருகின்றன? யார் கொடுப்பது?

Published:

hanuman serial - 2026
இவ்ளோ விசேஷ பூஜைகள், கடும் விரதங்கள் இப்படி எல்லாம் இருந்தும், ஏன் நமக்கு இவ்ளோ கஷ்டங்களை பகவான் கொடுக்கறார்…?

கஷ்டங்களை பகவான் கொடுக்கலைம்மா…!

அப்ப யார் கொடுக்கறா? தெரிஞ்சா போய் உலுக்கு உலுக்குன்னு உலுக்கி எடுத்து, நான் என்னடா பாவம் பண்ணேன்னு கேக்கலாம்!

ஓ.. அப்டியா? சரி.. நாம யாருக்கு பூஜை பண்றோம் ?

ஏன்.. வழக்கம்போல் கிருஷ்ணனுக்கு… ராம பிரானுக்கு… நரசிம்மருக்கு… நம்ம பெருமாள்… ரங்கநாதன் ரங்கநாயகித் தாயாருக்குதான்…

அதான் பிரச்னையே!

ஏன் என்ன பிரச்னை அதில்!?

நாம பண்ற பூஜையால இந்திரனுக்கு பிரச்னை ஆயிண்டிருக்கு! அவன் பதவிக்கு ஆபத்து வரும்னு அவன் கருதலாம்! அதனால், நம்ம மன உறுதியைக் குலைக்கறதுக்கும் பூஜைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தறதுக்கும் அவன் பல விதங்கள்ல அதர்மமா முயற்சி பண்றான்… ஏன் கிருஷ்ணர்கிட்டயே அவன் வேலையக் காட்டினானே… கோவர்த்தன கிரியை தூக்க வெச்சானே..! ராமர்கிட்டயே வேலையக் காட்டினானே…! அவன் மவன் ஜெயந்தன் என்னடான்னா.. சீதைகிட்ட வாலாட்டி, ராமன் விட்ட ஒரு புல்லு அம்பால உலகத்தையே சுத்தி கடைசில சரண் அடையலயா? அப்டி நம்மகிட்டயும் அவன் வேலையைக் காட்டறான்… அதனால்தான் நமக்கு இவ்ளோ மனக் கஷ்டங்கள்.. பிரச்னைகள்!

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

தேவர்களுக்கு தலைவன்னா… இந்திரன் ஏன் அப்டி அதர்மமா நடந்துக்கணும்?

நாம பண்ற பூஜைகளால பெருமான் அருள் கிடைச்சு… எங்க தம் பதவிக்கு நான் போட்டியா வந்துடுவேனோன்னு அவனுக்கு பயம்! அதான்… பதவியைக் காப்பாத்திக்கணும்னா தர்மமாவது அதர்மமாவது?

பின்குறிப்பு: ஜெய் ஹனுமான் சீரியல் பாத்து முடிச்சதும், அம்மா – மகனுக்கு இடையில் நடந்த உரையாடல்!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img