எனக்கு 35 உனக்கு 20..! கல்லூரி மாணவனை தமிழகத்துக்கே வந்து… கல்யாணத்துக்காகக் கடத்திய மலேசிய பெண்!

Published:

woman EMPOWERMENT - 2026

எனக்கு 35, உனக்கு 20 என்ற வகையில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனை மலேசியாவில் இருந்து வந்து கல்யாணத்துக்காகக் கடத்திச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலமாக 20 வயது இளைஞரை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார் என்று மலேசியாவைச் சேர்ந்த 35 வயது பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்தவர் மணிகண்டபிரபு (20 வயது). இவர் புதுக்கோட்டை அரசுக் கல்லூரியில் பிகாம் மூன்றாமாண்டு படித்து வருகிறார். ஃபேஸ்புக் மூலம் இவரும் மலேசியாவில் பணிபுரிந்து வரும் ப்ரியா (35 வயது) என்ற பெண்ணும் நட்பாகி பிறகு காதலர்களாக மாறினர்!

சில நாள்களுக்கு முன்னர் பிரியா மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளார். பின் தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டையில் இருவரும் சந்தித்துள்ளனர். இதையடுத்து இருவரும் மாயமாகி உள்ளனர்.

இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்க சென்றிருக்கலாம் என்று மணிகண்டபிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தேகித்து பொன்னமராவதி போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

இதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஃபேஸ்புக் மூலம் நட்பாகி காதலாகி மாயமான காதலர்களை தேடி வருகின்றனர்!

Related articles

Recent articles

spot_img