வடிவேலு போல் ஜோக்கர் ஆகிவிட்ட ஸ்டாலின்!

உள்ளூர் செய்திகள் மதுரை
sellur raju - 2026

நானும் ஜெயிலுக்கு போகிறேன், ஜெயிலுக்கு போகிறேன், என்று ஸ்டாலின் பேசி வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலை பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் துவங்கி வைத்தனர். விழாவில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

stalin - 2026

உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளவில்லை. எதற்காக பணி நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிவார்கள். திமுக கூட்டணியில் இருக்கும் பிரச்னை போல் அதிமுகவிற்கு எந்த பிரச்னையும் இல்லை எங்கு தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்.

இறக்குமதி செய்தால் தான் திமுகவில் 2 லட்சம் பேரை சேர்க்க முடியும் ஒரு நாடு ஒரு கார்டு திட்டம் அருமையான திட்டம். அதை விமர்சிக்க கூடாது. கோப்பு கையெழுத்தாகும் முன் எதிர்கட்சிகள் கொதிக்கின்றன. மற்ற மாநிலத்திலிருந்து வருவோருக்கு அரிசி அல்லது கோதுமை மட்டுமே வழங்குவோம். மற்ற மாநிலத்தவருக்கு பிற பொருட்கள் கிடையாது.

மத்திய தொகுப்பிலிருந்து அவர்கள் அரிசி வழங்குகிறார்கள் அதை அவர்களுக்கு வழங்க போகிறோம். அந்தந்த மாநிலத்தில் என்ன விலையோ அந்த விலைக்கு தான் அரிசி, கோதுமை வழங்கப்படும். நானும் ஜெயிலுக்கு போறேன்…. நானும் ஜெயிலுக்கு போறேன் என்பதே திமுகவின் செயல்பாடு.

வெளிநாடு அழைத்து செல்லாததால் அமைச்சர்கள் யாருக்கும் அதிருப்தி இல்லை, ஜெயலலிதா இருக்கும் போது 2015ல் என்னை வெளிநாடு செல்ல அனுமதித்தார். வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டு என் பயணம் ரத்தானது.

ராதாரவி அதிமுகவில் இணைந்தவர் என்றாலும் ரஜினி குறித்த அவரது கருத்து பற்றி எதுவும் கூற முடியாது. ராதாரவி இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை.

அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவரது புகைப்படத்தை மறந்துவிட்டனர். கலைஞரின் புகைப்படத்தையும் மறந்துவிடுவார்கள். திமுகவிற்கு தற்போது எதிர்காலம் இல்லை என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.