அரவேக்காடு அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை உயிர்கள் போகப் போகின்றன?

Published:

KAMAL - 2026

தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சுபஸ்ரீ மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர், இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்.

சாலையில் மகளின் ரத்தத்தை பார்ப்பது பெற்றோருக்கு மரண வலி, பெண்களை பெற்ற எனக்கும் அந்த வலி ஏற்பட்டது வாழ்வில் சாதிக்க இருக்கும் இளம் பிள்ளைகளின் மரணச் செய்தியை பெற்றோரிடம் சொல்வது கொடுமையானது.

இன்னும் எத்தனை ரகுக்களும் சுபஸ்ரீகளூம் பலியாவார்கள். பேனரை எங்கே வைக்க வேண்டும் என்று தெரியாதா? இது போன்ற அலட்சிய அதிகாரிகளாலும் அரவேக்காடு அரசியல் வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் போகப்போகின்றன.

எதிர்த்து கேள்வி கேட்டால் அடிப்பதும் தப்பைத் தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதும் இவர்களின் அரசியல். இந்த மாதிரி ஆட்கள் மேல் எனக்கு மயிரிழை அளவு கூட மரியாதையோ பயமோ கிடையாது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

உங்களுக்கு ஒருவேளை பயமிருந்தால் என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள். மக்கள் நீதிமய்யம் உங்கள் சார்பாக அந்த தவறுகளைத் தட்டிக்கேட்டு, தீர்வும் தேடித் தரப்படும்.
எங்களை ஆள்பவர்களை நாங்கள் தான் தேர்வு செய்வோம்.ஆனால் நாங்கள் காலம் முழுவதும் அடிமையாகத்தான் இருப்போம் என்றால் அது போல பைத்தியக்காரத்தனம் ஏதுவுமில்லை.

உங்களை சாதாரண மக்கள் என்று சொல்லியே அடிமையாக வைத்திருக்கிறார்கள். சாதாரண மக்கள் அசாதாரணமான தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்று நான் திண்மையாக நம்புகிறேன். வாருங்கள் புதிய தலைமையை உருவாக்குவோம் என்று புதிய தலைமையை உருவாக்க இந்த “அரசியல்வாதி” ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img