சொந்தமென்ன? பந்தமென்ன? நவ 1 ல் மகனுக்கு திருமணம்!தாய் தந்தை கொலையான மர்மம்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் தமிழகம்
body jodi - 2026

கணவன் மனைவி காணாமல் போன நிலையில் அவர்களின் உடல்கள் சகோதரியின் வீட்டில் கிடந்த சம்பவமானது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஈசநத்தம் எனும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள சூளபுரம் கிராமத்தில் ராஜா என்பவர் பைனான்சியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவியின் பெயர் வசந்தாமணி. தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், மகனுக்கு நவம்பர் 1-ஆம் தேதியன்று திருமணம் நிச்சயம் செய்திருந்தனர்.

திருமணத்திற்கு உறவினர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக தம்பதியினர் திருப்பூருக்கு சென்று வந்தனர். 10-ஆம் தேதியன்று வெள்ளக்கோவில் உதன்ட குமார வலசை கிராமத்தில் உள்ள தன்னுடைய மூத்த சகோதரியான கண்ணம்மாவுக்கு பத்திரிக்கை வைப்பதற்காக தம்பதியினர் புறப்பட்டுள்ளனர்.

ஆனால் அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்கள் சென்ற இண்டிகா கார் கரூர் மதுரை நெடுஞ்சாலையில் கேட்பாரற்று கிடந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து காரை பரிசோதித்தனர். அப்போது காரில் திருமண பத்திரிகைகள், அரிசி ஆகியன இருந்துள்ளன. மேலும் கார் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

பின்னர் செல்வராஜின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த செல்வராஜின் உறவினர்கள் கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் மாயமாகி இருந்தார். வீட்டு தேடியபோது பின்புறத்தில் புதிதாக ஒரு குழி வெட்டப்பட்டு இருந்தது. பாதி அளவு இருக்கும் மண் நிரப்பப்பட்டு மேல் ஒரு துணி மூடப்பட்டிருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் அதிக அளவில் வீசியதால் காவல்துறையினர் அதை ஆய்வு செய்தனர்.

அப்போது செல்வராஜும் அவருடைய மனைவியும் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக ரத்தவெள்ளத்தில் பாதியாக புதைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் காவல்துறையினரால் மீட்க இயலவில்லை.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.