போதை பொருள் தயாரிக்கும் போது பற்றிய தீ! இருவர் படுகாயம்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
fire - 2026

சென்னையில் ஹோட்டல் ஒன்றில் கஞ்சா ஜெல் தயாரிக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தீ பரவியதால் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னை அயனம்பாக்கம் மாந்தோப்பு காலனியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ரேஸ் ராஜா, விக்னேஷ், மாசி, முகமது ரசாக், ராஜேஷ் ஆகிய 5 பேரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அனைவரும் மது வாங்க செல்ல ரேஸ் ராஜா, விக்னேஷ் ஆகிய இருவர் மட்டும் அறையில் இருந்துள்ளனர்.

அறையில் இருந்த இருவரும் எலக்ட்ரிக் ஸ்டவ் மூலம் கஞ்சா, ஸ்பிரைட் ஆகியவற்றை சூடுபடுத்தி போதை ஜெல் தயாரிக்க முயன்றுள்ளனர். இதனால் அறை எங்கும் புகை பரவியுள்ளது. அந்த நேரம் பார்த்து ராஜா லைட்டரை ஆன் செய்தபோது அறை முழுவதும் எதிர்பாராதவிதமாக தீ பரவியுள்ளது. அந்த தீ அவர்கள் இருவர் மேலும் பரவ அலறிக்கொண்டு இருவரும் அறைக்கு வெளியே வந்து விழுந்துள்ளனர்.

அவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகிகள் தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருவரின் உடலிலும் அதிகப்படியான தீக்காயம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நண்பர்களான மாசி, முகமது ரசாக், ராஜேஷ் ஆகியோர்களை கைது செய்த காவலதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.