சென்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
IMG 20191201 WA0002 - 2026

சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது.

நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், அண்ணாசாலை, கிண்டி, ராமாபுரம், வடபழனி, பாடி, வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை மாநகரம் முழுவதும் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாயின. எங்கும் மழை நீர் குளம் போல் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொடர் மழையின் காரணமாக இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மழை பாதிப்பு குறித்து
044-25384520, 044-25384530, 044-25384540 என்ற எண்களிலும்,
9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.