வைரமுத்துவுக்கு ‘பட்டம்; கொடுக்க வருவதா? இந்துக்களின் எழுச்சியால்… ராஜ்நாத் சிங் வருகை ரத்து!?

Published:

15 July12 Rajnath singh - 2026

எஸ்.ஆர்.எம். பல்கலை., ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னைக்கு நாளை வருவதாக இருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வதற்கு இந்து அமைப்பினர், இயக்கத்தினர், தமிழக பாஜக.,வினர் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், மத்திய அமைச்சரின் வருகை ரத்து செய்யப் பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மத்தவங்க கொடுத்தா பட்டம்; நமக்கு நாமே கொடுத்துக்கிட்டா தம்பட்டம்! என்று ஒரு வசனம் உண்டு. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை.,க்கழகத்தின் சார்பில் அதன் நிறுவுனர் தற்போதைய எம்.பி., பச்சைமுத்து ஏற்பாட்டில் சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப் போவதாக செய்தி வெளியானது. அந்த நிகழ்ச்சியில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்து கொள்வதாக இருந்தது. .

ஆனால், இந்துக்களின் இறைவன் ராமபிரானையும், தாயார் ஆண்டாளையும் இழிவுபடுத்தி பேசிய வைரமுத்துவுக்கு பட்டம் வழங்க ராஜ்நாத் சிங் வருவதா என்று கண்டனங்கள் எழுந்தன.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இதை அடுத்து, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின. எஸ்.ஆர்.எம். பல்கலை முன் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று கூறின.

ராமர் அவதார புருஷன் அல்ல. அவன் கர்ப்பத்தில் உதித்தவன், ஆகையால் அவன் கடவுள் அல்ல
என்று இஸ்லாமிய கூட்டத்தில் பேசியவன் வைரமுத்து. இத்துடன் ஆண்டாள் நாச்சியாரையும் , அவமதித்ததையும் சேர்த்துக்கொள்ளவும்..
இந்து மதம் கடவுள்கள், பாஜக ,மோடி எல்லோரையும் அவமதித்து பேசியவன் தகரமுத்து..
ஆனால் இவனுக்கு விருது மட்டும்
பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் கொடுக்க வேண்டுமா? கஞ்சா கவிஞனை உனது அழிவு சீக்கிரம்.

  • என்ற ரீதியில் சமூகத் தளங்களிலும் கருத்துகள் பரவின.

இந்நிலையில், நிகழ்ச்சியினால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்து, ராஜ்நாத் சிங்கின் பயணம் ரத்து செய்யப் பட்டிருப்பதாகவும், ராஜ்நாத் சிங், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் பாஜக.,வினர் தெரிவித்தனர். .

பச்சைமுத்து 2014ல் தேர்தல் நேரத்தில் அப்போது பாஜக., தலைவராக இருந்த ராஜ்நாத் சிங்குடன் நேரடியாக பேசி பழகியவர் என்றும், அந்த பழக்கத்தின் அடிப்படையில், வைரமுத்துவுக்கு சரிந்து போன இமேஜை மீண்டும் தூக்கிப் பிடிக்க ராஜ்நாத் சிங் மூலமே முயற்சியை அவர் மேற்கொண்டார் என்றும் கூறப் படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக.,வினரின் எதிர்ப்பால், பச்சைமுத்துவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக.,வினர் கூறுகின்றனர்.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img