வீடியோ காலில் வீட்டார் நலன் விசாரிக்கும் கோவில் யானை! வைரல் வீடியோ!

உள்ளூர் செய்திகள் கோவை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
elephant - 2026

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் கள்ளழகர் கோவில் சுந்தரவள்ளி தாயார் யானையின் பாகன் தன் மனைவி, குழந்தைகளுடன் போனில் வீடியோ காலில் பேசினார். அப்போது பாகன் தன்னுடைய மனைவியிடம் பேசுவதை யானை கூர்ந்து கவனித்தது பின்னர் செல்போனை யானை முன்னால் காட்டினார் பாகன்.

அப்போது யானை பாகனின் குடும்பத்தைப் பார்த்து நலம் விசாரிப்பது போல் உடலை ஆட்டியது. பின்னர் யானையை பாகனின் மனைவி செல்ல பெயருடன் அழைத்தார்.

elephant 1 - 2026

கூர்ந்து கவனித்த யானை வீடியோவில் தெரிந்த உருவத்தை அடையாளம் கண்டு மகிழ்ச்சி அடைந்தது. யானையை பார்த்து நல்லா இருக்கிறயா? நேரா நேரத்துக்கு சாப்புடுகிறாயா?

குறும்பு செய்யாமல் அப்பா சொல்வதை கேள் என்றார் பாகனின் மனைவி. இந்த கட்டளையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக யானை தலையாட்டியது. இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் அனைவரும் அந்த யானையின் குறும்புத்தனத்தை பார்த்து ரசித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.