நெல்லை கண்ணன் ஜாமீன் மனு விசாரணை ஜன.9க்கு ஒத்திவைப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
nellai kannan chair - 2026

இன்று நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நெல்லை கண்ணன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. ஆனால் அப்போது, அரசு வழக்குரைஞர் சிவலிங்கமுத்து அவகாசம் கோரினார்.

அரசு வழக்குரைஞர் அவகாசம் கோரியதால் நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

முன்னதாக, நெல்லையில் எஸ்டிபிஐ., இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பிரமுகரும் பேச்சாளருமான நெல்லை கண்ணன், மோடி, அமித் ஷா சோலியை இஸ்லாமியர்கள் முடித்துவிட வேண்டும் என்று பேசினார். இது பெரும் அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டு, பெரம்பலூரில் அவர் கைது செய்யப் பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.