
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரும்பாலும் அமைதி மற்றும் உலக ஒற்றுமை, வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனக்கான வாழ்வின் அடிநாதம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற தொடக்க காலப் பயிற்சியே என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது.
அதன் நான்காவது பகுதி ….
வினா – ஆனால் இந்தியா என்ற நாடு பற்றிய கருத்தையும் உருவாக்கினார்கள். இந்தியாவை ஒருங்கிணைக்கும் கருத்து என்ன? ஒரு நாடாக இந்தியா என்பது என்ன? இத்தனை வேறுபட்ட கூறுகளையும், பல்வேறு கலாச்சாரங்களையும் இணைக்கும், இந்தியாவை ஒரு நாடாக இணைக்கும் அடிப்படைத் த்த்துவம் என்ன?
மோதிஜி – அதாவது ஒரு பாரதம், இதுவொரு, கலாச்சார அடையாளம். ஒரு கலாச்சார்ரீதியிலான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான நாகரீகம். பாரத்த்தின் விசாலத்தன்மையைப் பாருங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள், ஆயிரக்கணக்கான வழக்குமொழிகள், நீங்கள் பாரத்த்தின் சில மைல்கள் சென்றால் நாங்கள் சொல்லுவோம், 20 மைல்கள் சென்றால் வழக்குமொழி மாறிவிடும். வழக்கங்கள் மாறிவிடும் சமையல்முறை மாறிவிடும். உடையணிகள் மாறிவிடும். தென்னாடு முதல் வடநாடு வரை, தேசம் முழுக்க பன்முகத்தன்மை நிறைந்து கிடக்கிறது.
ஆனால் மேலும் ஆழமாக ஆராய்ந்தால், அப்போது உங்களுக்கு, ஒரு, இழை புலப்படும் எடுத்துக்காட்டாக எங்கள் நாட்டில், பகவான் இராமன் பற்றி அனைவருமே விரித்துப் பேசுவார்கள். இராமனின் பெயரை… அனைத்து இடங்களிலும் நீங்கள் கேட்கலாம். ஆனால் நீங்கள் பார்த்தீர்களானால், தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி, ஜம்மு கஷ்மீரம் வரை சென்றால், தங்கள் பெயரிலே இராமன் உடைய பலர் தென்படுவார்கள். குஜராத்திற்குச் சென்றால் ராம்பாய் என்பார்கள், தமிழ்நாட்டுக்குச் சென்றால் ராமச்சந்திரன் என்பார்கள், மகாராஷ்டிரம் சென்றால் ராம்பாவு என்பார்கள். அதாவது இந்த சிறப்புத்தன்மை தான், பாரத்த்தை ஒன்றிணைக்கிறது.
எடுத்துக்காட்டாக, நீங்கள், எங்கள் தேசத்தில் நீராடினீர்கள் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்? பக்கெட்டிலிருந்து நீரை மொண்டு கொள்வீர்கள். ஆனால் கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதீ. அதாவது பாரத்த்தின் அனைத்து மூலைகளிலும் இருக்கும் நதிகளை நினைந்து பார்த்து, நர்மதே சிந்து காவேரி, ஜலே அஸ்மின், சன்னிதிம் குரு. அதாவது, அனைத்து நதிகளின் நீரைக்கொண்டு நான் நீராடுகிறேன். மொத்த தேசத்தின் நதிகள் எங்கள் நாட்டில் சங்கல்ப பாரம்பரியம் உண்டு. எந்த ஒரு பணியைச் செய்தாலும், பூஜையிலே, சங்கல்பம் செய்வோம். சங்கல்பத்தால் பெரிய வரலாற்றையே எழுதலாம்.
அதாவது, எந்த வகையிலே, தரவுகள் சேகரிப்பு என் தேசத்திலே (சிரிப்பு) செய்தார்கள் என்றால், சாஸ்திரங்கள் எப்படி பணியாற்றின என்பது தனித்தன்மையான விஷயம். ஒருவர் சங்கல்பம் செய்கிறார் பூஜை செய்கிறார் திருமணம் நடக்கிறது, அப்போது, மொத்த பிரும்மாண்ட்த்திலிருந்து தொடங்குவார்கள். ஜம்புத்வீபே பரதக்கண்டே ஆர்யவர்த்தம் முதல் ஆரம்பித்து, கிராமம் வரை வருவார்கள், பிறகு குடும்பம் வரை வருவார்கள், பிறகு குடும்பத்தின் தேவதையை நினைவில் கொள்வார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இன்றும் இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் இது நடக்கிறது. ஆனால் மேற்கத்திய மாதிரியோ உலகின் வேறு மாதிரிகளோ துரதிர்ஷ்டவசமாக எப்படி இருக்கிறது? ஆட்சிமுறையை அடிப்படையாக வைத்தே கணக்கில் கொள்ளப்படுகிறது. பாரத்த்திலும் ஆட்சிமுறை பலவகையாக இருந்திருக்கிறது.
பல்வேறுபட்ட தனித்தனித் துண்டுகளாகப் புலப்படும். அரசர் பேரரசர்களின் எண்ணிக்கையைப் புலப்படுத்தும். ஆனால் பாரத்த்தின் ஒருமைப்பாடு, இந்த கலாச்சார பிணைப்புகளால் நீடித்த்து. எங்கள் தேசத்தில் தீர்த்த யாத்திரைப் பாரம்பரியம் உண்டு. 4 புனித்த் தலங்களை சங்கராச்சாரியார் நிறுவினார். இன்றும் கூட இலட்சோபலட்சம் பேர்கள் ஓரிட்த்திலிருந்து வேறு இட்த்துக்கு, தலயாத்திரை மேற்கொள்கிறார்கள். எங்கள் தேசத்தில் காசிக்கு மக்கள் வருவார்கள், இராமேஸ்வரத்திலிருந்து கடல்நீரை எடுத்துக் கொள்ளும், அநேக வகைப்பட்ட மக்களைப் பார்க்கலாம். அந்த வகையிலே பார்த்தால், எங்கள் பஞ்சாங்கத்தை கவனித்தால், உங்கள் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களை தேசத்திலே பார்க்கலாம்.
வினா – நீங்கள் நவீன இந்தியாவின் வரலாற்று நிறுவுதலைப் பார்க்கும் போது, உங்களோடு சேர்த்து, காந்தியடிகள், இதுவரை வாழ்ந்த மிக முக்கியமான மனிதர்களுள் ஒருவர். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நபர்களில் அவரும் ஒருவர். காந்தியடிகள் குறித்து வியப்பேற்படுத்திய ஒரு விஷயம் என்ன?
மோதிஜி – உங்களுக்கே தெரியும் நான் பிறந்த்து, குஜராத் மாநிலத்தில். என்னுடைய தாய்மொழி குஜராத்தி. காந்தியடிகளும் குஜராத்திலே தான் பிறந்தார். அவருடைய தாய்மொழியும் கூட, குஜராத்தி தான். அவர் பேரிஸ்டர் ஆனார், அயல்நாடுகளில் வாழ்ந்தார். அவருக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால் உள்ளார்ந்து உறையும் உணர்வு, குடும்பம் அவருக்கு அளித்த நற்பண்புகள், அனைத்தையும் துறந்து விட்டு, பாரத நாட்டவருக்குச் சேவைபுரிய வைத்த்து. பாரத்த்தின் சுதந்திர வேள்வியில்… அவர் ஈடுபட்டார். காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது. மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். எடுத்துக்காட்டாகத் தூய்மை. அவர் தூய்மையின் நேசனாகவும் இருந்தார் தாமே கூட தூய்மைப் பணியில் ஈடுபட்டார். எங்கே சென்றாலும் தூய்மை பற்றியே பேசினார்.
இன்னொரு விஷயம் பாரதம் சுதந்திரப் போரில் ஈடுபட்ட்து. பாரதம், முகலாயர்களாக இருக்கலாம், ஆங்கிலேயர்களாக இருக்கலாம் வேறு யாராகவும் இருக்கலாம், இந்தியாவினுடைய பலநூறு ஆண்டுக்கால அடிமைத்தளைகளைத் தாண்டி, அனைத்துக் காலகட்டங்களிலும், அனைத்து பகுதிகளிலே எங்காவது இட்த்திலே, சுதந்திரத்தீ எரியாமல் இருந்த்தில்லை. இலட்சோபலட்சம் மக்கள் உயிர்த்தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள். இலட்சக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். சுதந்திரத்திற்காக இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். தங்கள் இளமையை சிறைகளில் தொலைத்திருக்கிறார்கள்.
அண்ணல் காந்தியடிகளும் சுதந்திர வேள்வியில் ஈடுபட்டார் ஆனால் என்ன வித்தியாசம்? அவர்களெல்லாம், தவசீலர்கள் வீரத்திருமகன்கள் தியாகிகள் தேசத்திற்காகத் தியாகம் புரிந்தவர்கள். ஆனால் வந்தார்கள் தேசத்திற்காக உயிரை அர்ப்பணித்தார்கள். பாரம்பரியம் மிகவும் வலுவாக இருந்த்து. ஆனால், காந்தியடிகளோ, மக்கள் இயக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் சாதாரண மக்களில் ஒருவர் துப்புறவு செய்தால் நீ சுதந்திரத்திற்காகச் செய்கிறாய், ஒருவருக்கு கல்வி பயில்வித்தால், நீ சுதந்திரத்திற்காகச் செய்கிறாய், நீ சர்க்காவில் நூல் நூற்கிறாய், நீ சுதந்திரப் பணியில் ஈடுபடுகிறாய். நீ, தொழுநோயாளிகள் சேவையில் ஈடுபட்டால் சுதந்திரத்திற்காகச் செய்கிறாய். அவர் அனைத்துப் பணிகளையும் சுதந்திரத்தின் வண்ணங்களால் நிறைத்தார். இதன் காரணமாக சாமான்ய மக்களும் தாங்களும் சுதந்திர வேள்வியில் பங்குதார்ர்கள் என்று உணர்ந்தார்கள். இப்படிப்பட்ட மக்கள் இயக்கத்தை காந்தியடிகள் ஏற்படுத்தினார். இதனை, ஆங்கிலேயர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
ஆங்கிலேயர்களுக்கு சற்றும் புரியவில்லை, ஒரு சிட்டிகை உப்பு, தாண்டி யாத்திரை, ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த வல்லது அதைச் செய்தும் காட்டினார். இதுவே வல்லமை. அவருடைய வாழ்க்கை நடவடிக்கை வழிமுறை, அவருடைய தோற்றம் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்தின. நானே கூட பார்த்திருக்கிறேன், அவர்பற்றிய, பல சிறியபெரிய சம்பவங்கள் புகழ் பெற்றதாக இருக்கின்றன. அவர் ஒருமுறை வட்டமேஜை மாநாட்டிலே, இந்திய விடுதலை குறித்துப் பேச அவர் வட்டமேஜை மாநாட்டிற்குச் சென்றிருந்தார்.
பக்கிங்ஹாம் மாளிகையில் ஜார்ஜ் மன்னரோடு அவர், சந்திக்கும் நேரம் அது. ஆனால் காந்தியடிகளோ வேட்டியையும் மேல் துண்டையும் போர்த்திக் கொண்டு சென்று விட்டார். அங்கே இருந்த காவலாளிகளோ இப்படிப்பட்ட உடையை உடுத்திக் கொண்டு, அரசரைச் சந்திக்க வந்திருக்கிறாரே என வினவினார்கள். நான் ஆடை உடுத்திக் கொள்ள என்ன தேவை இருக்கிறது என்றார். எத்தனை ஆடை உங்கள் அரசரின் மீது இருக்கிறதோ, அது எங்கள் இருவருக்குமே போதுமானது. இப்படிப்பட்ட நகைச்சுவை இயல்பு உடையவர் அவர். இப்படி காந்தியடிகளின் பல சிறப்புக் குணங்கள் உண்டு.
என்னைக் கவரும் மேலும் ஒரு விஷயம், சமூகத்தன்மையை விழிப்படையச் செய்வது, மக்கள் சக்தியை அவர் அடையாளம் கண்டு கொண்டார். அது இன்றும்கூட மகத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன். நான் எந்தப் பணியைச் செய்தாலும் என்னுடைய முயற்சி என்னவென்றால், சாமான்ய மக்களை இணைத்துப் பயணிப்பது. அதிகபட்ச மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். அரசாங்கம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும். இந்த உணர்வு என் மனதில் கிடையாது. சமுதாயத்தின் சக்தி அளவிட முடியாத ஒன்று. இதுவே என்னுடைய நம்பிக்கை.
வினா – ஆக அவர் தான் 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தலைவர்களுள் ஒருவர். நீங்கள் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். இந்த இரண்டு நூற்றாண்டுகள் வேறுபட்டவை. நீங்கள் புவிசார் அரசியலின் வித்தகராக விளங்குகிறீர்கள். அந்த வகையில் மிகச் சக்திவாய்ந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நட்த்தும் போது, நேசிக்கப்படுவது சிறந்த்தா, அச்சமேற்படுத்துவது சிறந்த்தா? உங்களின் நிபுணத்துவமே அனைவராலும் நேசிக்கப்படுவது, ஆனால் அனைவருக்கும் உங்கள் பலத்தின் மீது அச்சமுண்டு. இந்த நிதானத்தை எப்படி தக்க வைக்கிறீர்கள்? அந்த நிதானம் பற்றி?
மோதிஜி – முதல் விஷயம் என்னவென்றால், இப்படி ஒப்பீடு செய்வது, உகந்ததாக இருக்காது. அதாவது 20ஆம் நூற்றாண்டின் மாபெரும் தலைவர், காந்தியடிகள். அது 20 ஆகட்டும் 21ஆகட்டும் 22 ஆகட்டும். காந்தி மாபெரும் தலைவராக அனைத்து நூற்றாண்டுகளுக்கும் இருப்பார். வரவிருக்கும் நூற்றாண்டுகளிலும் காந்தியடிகளே மாபெரும் தலைவர். ஏனென்றால் நான் அவரை அந்த பிம்பமாகவே பார்க்கிறேன் இன்றும் கூட அவரை, உகந்தவராகவே காண்கிறேன்.
அதே வேளையில் மோதி பற்றிப் பேசினால், என்னிடம் ஒரு பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், என் தேசம் எத்தனை பெரியதோ அதை விடப் பெரியதாக பொறுப்பு இல்லை. என் தேசத்தின் மகத்துவத்தை விட தனிநபர் மகத்துவமானவர் அல்ல. என்னுடைய பலம் என்றால், அது மோதி அல்ல. 140 கோடி நாட்டுமக்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சாரப் பாரம்பரியம், இதுவே என் வல்லமை ஆக நான் எங்கே சென்றாலும், மோதி செல்வதில்லை. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வேதம் தொடங்கி விவேகானந்தர் வரையான பாரம்பரியத்தை, 140 கோடி நாட்டு மக்களுடைய, கனவுகளையும் எதிர்பார்ப்புக்களையும் தாங்கியே நான் பயணிக்கிறேன்.
அந்த வகையிலே நான் உலக நாடுகளின் தலைவர்களோடு கைகுலுக்கும் போது, மோதி கை குலுக்கவில்லை. 140 கோடி மக்களின் கைகள் குலுக்குகிறார்கள். வல்லமை மோதியுடையது கிடையாது. வல்லமை பாரத்த்தினுடையது. மேலும் இதுதான் காரணம். எனக்கு நினைவிருக்கிறது 2013இலே, என்னுடைய, கட்சி என்னை பிரதம மந்திரி வேட்பாளராகத் தேர்வு செய்த போது, என்னைப் பற்றி ஒரே ஒரு விமர்சனம் தான் முன்வைக்கப்பட்ட்து. அது பரவலாகவும் பேசப்பட்ட்து.
மோதி ஒரு மாநிலத்தின் தலைவர் தானே. ஒரு மாநிலத்தை மட்டுமே நிர்வகித்திருக்கிறார். அவருக்கு அயலுறவு பற்றி என்ன தெரியும்? அவர் அயல்நாடுகளுக்குச் சென்று என்ன செய்வார்? இப்படி பல விஷயங்கள் பேசப்பட்டன. என்னைப் பேட்டி கண்டவர்கள் அனைவரும், இதே கேள்வியை என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் விடையளித்தேன். நான் கூறினேன், பாருங்கள் ஐயா. ஒரு பத்திரிக்கை பேட்டியில் என்னால் மொத்த அயலுறவு பற்றி விளங்க வைக்க முடியாது. அது அவசியமும் கிடையாது. ஆனால் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். அதாவது இந்தியா, கண்களை, தாழ்த்தியும் பேசாது, கண்களை, மேலுயர்த்தியும் பேசாது, ஆனால் இப்போது இந்தியா, கண்ணோடு கண் நோக்கிப் பேசும். நான்… 2013இலே இந்த வகையிலே பேசினேன். இன்றும் கூட, இந்த எண்ணப்படியே… நடக்கிறேன்.
எனக்கு என் தேசம் தான் முதன்மையானது. ஆனால், யாரையாவது தாழ்த்திப் பேசுவது, யாரைப்பற்றியும் பொல்லாங்கு கூறுவது, இது என்னுடைய கலாச்சாரப் பண்பும் இல்லை, என் கலாச்சாரப் பாரம்பரியமும் இல்லை. நாங்கள் விரும்புவதெல்லாம் என்னவென்றால், மனித சமூகம் முழுமையின் நலன் மட்டுமே. பாரதம் உலகம் வாழ வேண்டும் என்றே விரும்பி வந்திருக்கிறது. உலக சகோதரத்துவத்தினையே சிந்தித்திருக்கிறது. பல நூற்றாண்டுகள் முன்னரே கூட உலகையே ஓர் குடும்பமாகப் பார்த்தவர்கள் நாங்கள். ஒட்டுமொத்த பிரும்மாண்டத்தின் நலன் பற்றிச் சிந்திக்கும், மக்கள் நாங்கள்.
அந்த வகையிலே நீங்களே கவனித்திருக்கலாம், நமது உரையாடலில் என்ன நடக்கிறது? நான் உலகத்தின் முன்பாக, பல்வேறு கருத்துக்களை முன்வைத்தேன். அந்தக் கருத்துக்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்!! எடுத்துக்காட்டாய் ஒரு விஷயம் கூறியிருந்தேன். சுற்றுச்சூழல் பற்றிப் விவாதிக்கும் போது நான் கூறினேன், ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு மின்தொகுப்பு. இது ஒரு பக்கம் கோவிட் வாட்டிக் கொண்டிருந்த போது, ஜி 20இலே தான் நான் பேசியிருந்தேன்.
நான் கூறினேன்… ஐயா எங்களுடைய, ஒரு ஆரோக்கியம் பற்றிய கோட்பாட்டை, நாம் மேம்படுத்த வேண்டுமென்றேன். அதாவது எப்போதுமே என்னுடைய முயற்சி என்னவாக இருந்த்து என்றால், எடுத்துக்காட்டாய் ஜி 20யுடைய என்னுடைய லோகோ, ஒரு பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம். அனைத்து விஷயங்களிலும் எங்களை வார்த்தெடுக்கும் பண்பான ஒற்றுமையை இணைத்தோம். இப்போது நாங்கள் புதுப்பிக்கவல்ல எரிசக்தி தொடர்பான இயக்கத்தை முடுக்கினோம்……………. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை ஏற்படுத்தினோம். ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு மின்தொகுப்பு. உலகம் தொடர்பாக அதே உணர்வு.
கோவிட் காலத்தில் ஆரோக்கியம் தொடர்பாக, ஒரு பூமி ஒரு ஆரோக்கியம் என்றோம். ஒரு பூமி ஒரு ஆரோக்கியம் எனும் போது, அனைத்து உயிர்களும் அது தாவரங்களாகட்டும், விலங்கினங்கள் ஆகட்டும், அல்லது மனிதர்களாகட்டும். அதாவது… எப்போதும் எங்கள் முயற்சி என்னவென்றால், உலகத்தின் நலனுக்கு ஆதாரமான விஷயங்கள் தொடர்பாக நாம் முயற்சி செய்ய வேண்டும். நாமனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
இன்று உலகம், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது. தனியாக யாராலும் செயல்பட முடியாது. இன்று உலகம் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. தனியாக எதையும் செய்ய முடியாது. அந்த வகையிலே அனைவரோடும் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் அனைவரும் அனைவரோடும் இசைவாகப் பயணிக்க வேண்டும். நாம் இந்தப் பணியை முன்னெடுக்க முடியும். ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்பு பிறந்த்து, உலகப்போருக்குப் பின்னால். ஆனால் காலத்தால், அதில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் நடக்கவில்லை. இதன் காரணமாக அதனால், எத்தனை செய்ய முடிந்த்து செய்ய முடியவில்லை என்ற விவாதம் நடக்கிறது.
வினா – நீங்கள் உங்கள் அனுபவங்கள் பற்றிப் பேசினீர்கள், உலகின் பல இடங்களில் போர் நிலவும் வேளையிலே புவிசார் அரசியலில் மிகப்பெரிய சமரஸம் உருவாக்கும் உங்கள் பலம் குறித்துப் பேசினீர்கள். அமைதியை ஏற்படுத்த உங்களுடைய செயல்முறையை விளக்க முடியுமா? போரில் ஈடுபட்டிருக்கும் இரு நாடுகளுக்கிடையே எப்படி சமரஸத்தை ஏற்படுத்த முடியும்? எடுத்துக்காட்டாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே.
மோதிஜி – கவனியுங்கள் நான் பிரதிநிதியாக விளங்கும் தேசம், பகவான் புத்தனின் பூமியாகும். நான் பிரதிநிதியாக விளங்கும் தேசம், பகவான் காந்தியடிகளின் பூமியாகும். இவர்கள் எப்படிப்பட்ட மாமனிதர்கள் என்றால், இவர்களுடைய உபதேசங்கள், இவர்களின் சொல் செயல் நோக்கம், முழுமையாக அமைதிக்கே அர்ப்பணிக்கப்பட்ட்து. அந்த வகையிலே, கலாச்சார்ரீதியாக வரலாற்றுரீதியாக எங்களுடைய பின்புலம் எந்த அளவுக்கு பலமானதென்றால், நாங்கள் அமைதி குறித்துப் பேசும் வேளையிலே, உலகம்… எங்களுக்குச் செவிமடுக்கிறது.
ஏனென்றால் இது புத்தனின் பூமி. இது காந்தியடிகளின் பூமி. உலகம் நாங்கள் சொல்வதைக் கேட்கிறது. மேலும் நாங்கள், போரின் தரப்பாளர்கள் அல்ல. நாங்கள் சமரஸத்தின் ஆதரவாளர்கள். நாங்கள் இயற்கையோடும் பிணக்கை விரும்பவில்லை, நாங்கள் நாடுகளுக்கிடையேயும் போரை விரும்பவில்லை. நாங்கள் சமரஸ விரும்பும் மக்கள். இதில் எங்களால் பங்களிப்பு ஏதும் அளிக்க முடிந்தால், நாங்கள் எப்போதுமே முயன்று வந்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக, எங்களுக்கு ரஷியாவுடனும் நெருங்கிய உறவு, உக்ரைனுடனும் நெருங்கிய உறவு.
என்னால் ஜனாதிபதி புடினுடன் அமர்ந்து கொண்டு உலகிற்கு உரைக்க முடியும், இது போருக்கான காலம் அல்ல என்று. நான் ஜெலன்ஸிக்கும் ஒரு நண்பன் என்ற முறையிலே கூற முடியும், ஐயா, உலகம் எத்தனை தான் உங்களுக்குத் துணையாய் நின்றாலும், போர்க்களத்திலே எப்போதும், முடிவுகளைக் காண முடியாது. முடிவுகள் எப்போதும் மேஜையிலே தான் எட்ட முடியும். முடிவுகளை எப்போது எட்ட முடியுமென்றால், அந்த மேஜையிலே, உக்ரைனும் ரஷியாவும் இருவரும் இருக்கும் போது தான் உலகனைத்தும் உக்ரைனுக்கு ஆதரவாக என்ன தான் மண்டையை உடைத்துக் கொண்டாலும், அதனால் முடிவுகளை எட்ட முடியாது. இருதரப்பும் இருக்க வேண்டியது அவசியம்.
தொடக்கத்தில் புரிய வைக்க முடியவில்லை ஆனால் இன்று ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையால், எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ரஷியா உக்ரைன் இருவரும்… நான் நம்பிக்கையாளன். அவர்கள் நிறைய, ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். உலகிற்கும் நிறைய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. உலகத் தென்னாடுகளுக்கு நிறைய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் உணவு, எரிபொருள் மற்றும், உரங்கள், சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. மிக விரைவாக அமைதி திரும்ப வேண்டும் என்று உலகம் விரும்புகிறது. நான் அமைதியின் தரப்பாளன் என்று எப்போதுமே கூறி வந்திருக்கிறேன். நான் சார்பில்லாதவன் இல்லை நான் அமைதித் தரப்பாளன். தொடர்ந்து முயன்று வருகிறேன்.