
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரும்பாலும் அமைதி மற்றும் உலக ஒற்றுமை, வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனக்கான வாழ்வின் அடிநாதம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற தொடக்க காலப் பயிற்சியே என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது.
அதன் ஐந்தாவது பகுதி ….
வினா – இன்னொரு கடினமான உறவு என்று சொன்னால் அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையேயான உறவு. மிக ஆபத்தான பிணக்குகளில் இது ஒன்று. தீவிரமான சித்தாந்த முரண்பாடுகள் நிறைந்த இரு அணு ஆயுத சக்திகள். எதிர்காலத்திற்கு உள்ளே சென்று நோக்கும், மிகப்பெரிய அமைதி நிறுவனர் நீங்கள். ஒரு தொலைநோக்காளர் என்ற வகையிலே, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு, இணக்கம், நட்புக்கான பாதை எது என்று கூறுங்களேன்.
மோதிஜி – ஒரு விஷயம், வரலாற்றின் சில விஷயங்கள் பற்றி, உலகில் பலருக்கு தெரிவதில்லை. 1947ற்கு முன்பாக, சுதந்திரப் போராட்ட்த்திலே அனைவரும் இணைந்தே போராடினார்கள். தேசம் சுதந்திரம் அடையும், அந்த வேளையை, மிகவும் எதிர்பார்ப்போடும் நோக்கிக் கொண்டிருந்த்து. அந்த நேரத்திலே, என்ன சங்கடம் இருந்த்தோ, அதன் பல, தரப்புகள் பற்றி நீண்ட விவாதங்களில் ஈடுபடலாம். அந்த நேரத்தில் தலைமையில் இருந்தவர்கள் பாரதம் துண்டாடப்படுவதை ஏற்றுக் கொண்டார்கள். முஸல்மான்களுக்கென தனி தேசம் வேண்டுமென்றால் அதை அளியுங்கள். அப்படி உணர்ந்தார்கள்.
பாரத தேசத்தவர்கள் நெஞ்சினில் கடும்பாறை தாங்கி, மிகுந்த வலியோடு, இதையும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் ஏற்றுக் கொண்ட போதும், அதன் விளைவாக உடனடியாக இலட்சக்கணக்கான பேர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பாகிஸ்தானிலிருந்து பல ரயில்களில் மக்களின் சடலங்கள் வந்த வண்ணம் இருந்தன. பயங்கரமான காட்சி அது. அவர்கள் வேண்டியது கிடைத்த பிறகு என்ன உணர்ந்திருக்க வேண்டும் நமக்குக் கிடைத்து விட்ட்து, பாரதவாசிகள், கொடுத்து விட்டார்கள், பாரத்த்திற்கு நன்றி தெரிவிப்பதற்கு பதிலாக அவர்கள், தொடர்ச்சியாக பாரத்த்துடன் போர்ப்பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். மறைமுகப் போர் நடக்கிறது. இதில் சித்தாந்தமேதும் கிடையாது. இது சித்தாந்தப் போர் அல்ல. மக்களைக் கொல் சிதை. தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்யும் வேலை நடக்கிறது. இது எங்களுக்கு எதிராக மட்டுமல்ல. இப்போது உலகத்திலே எங்கெல்லாம் தீவிரவாதச் சம்பவம் நடக்கிறதோ, ஏதோ ஒரு வகையிலே அதன் ஆணிவேர் பாகிஸ்தானிலே, அகப்படுகிறது.
பாருங்கள் 9/11 எத்தனை பெரிய சம்பவம் நடந்த்து, அமெரிக்காவிலே. தன் முக்கிய குற்றவாளியான ஓசாமா பின் லாதேன், அவர் கடைசியில் எங்கே இருந்தார்? பாகிஸ்தானிலே தானே தஞ்சமடைந்தார். உலகம் அடையாளம் கண்டு கொண்ட்து, ஒரு வகையிலே, தீவிரவாத, இயல்பு, தீவிரவாத மனப்பான்மை, இது பாரத்த்திற்கு மட்டுமல்ல, மொத்த உலகிற்கும் தீவிரவாத மையமாக ஆகி விட்ட்து. நாங்கள் தொடர்ந்து அவர்களுக்குக் கூறி வந்திருக்கிறோம், இந்தப் பாதையால் யாருக்கு நன்மை ஏற்படக்கூடும்? நீங்கள் தீவிரவாதப் பாதையை விட்டொழியுங்கள். நாடு ஆதரிக்கும் தீவிரவாதம், நிறுத்தப்பட்டாக வேண்டும்.
நாடு சாரா தீவிரவாதிகளிடம் அனைத்தையும் விட்டு விட்டீர்களா? அமைதியின் பொருட்டே நானே லாகூருக்கு சென்றேன். நான் பிரதம மந்திரி ஆன பிறகு, என்னுடைய பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தானுக்கு சிறப்பு அழைப்பு விடுத்திருந்தேன். நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன். ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து. அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும், என்றே விரும்புகிறோம் வளமும், அமைதியும் நிறைந்த பாதையிலே அவர்கள் பயணிக்க வேண்டும், அந்த நாட்டவரும், கஷ்ட்த்தில் இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். அங்கிருப்போரும் கூட, தங்கள் அன்றாட வாழ்க்கை இப்படி இருப்பதை, இப்படிப்பட்ட படுகொலைகள், தீவிரவாத சம்பவங்களை விரும்பவில்லை. குழந்தைகள் இறக்கிறார்கள். தீவிரவாதிகள் முளைக்கிறார்கள். மக்களின் வாழ்க்கை நாசமாகிறது.
வினா – உங்களுடைய கடந்தகால முயற்சிகள் தொடர்பாக, பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்தும் வகையில், எதிர்காலப் பாதையை ஏற்படுத்தக்கூடிய முறையிலே, சுவாரசியமான சம்பவங்கள் ஏதேனும் இருக்கிறதா?
மோதிஜி – மிக முக்கியமான விஷயம் உறவுகளை மேம்படுத்தும் வகையில் மிகப்பெரிய திருப்புமுனை என்றால், பிரதமர் ஆனவுடனேயே, என்னுடைய சபதமேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்த்து. இது உள்ளபடியே மிகப்பெரிய சம்பவம் ஆகும். பல பத்தாண்டுகளுக்குப் பிறகு இது நடந்த்து. என்னிடம் 2013இலே யாரெல்லாம் என்னிடம் வினா எழுப்பினார்களோ, மோதியின் அயலுறவுக்கு என்ன ஆகும்? அவர்கள் அனைவரும் இதைக் கேள்விப்பட்ட போது, மோதி அவர்கள், சபதமேற்பு விழாவிற்கு சார்க் நாட்டுத் தலைவர்கள் அனைவரையும் அழைத்திருக்கிறார் என்றதும், திகைத்துப் போனார்கள்.
இந்தத் தீர்மானம் இந்தச் செயல்பாடு தொடர்பாக, எங்களுடைய அந்நாளைய குடியரசுத் தலைவர் பிரணவ் முகர்ஜி அவர்கள், அவர்கள் தன்னுடைய புத்தகத்திலே எழுதியிருந்தார், அதிலே இந்தச் சம்பவம் குறித்து மிகச் சிறப்பாக வர்ணித்திருக்கிறார். உண்மையிலேயே பாரத்த்தின் அயலுறவுக் கொள்கை, மிகவும் தெளிவாக இருக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்த்தாக இருக்கிறது. அது கண்கூடாக காணப்பட்ட்து. பாரதம் அமைதிக்காக கச்சை கட்டிக் கொண்டிருக்கிறது, இது குறித்த செய்தி உலகமெங்கும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்ட்து. இருந்தும் விளைவு சுமுகமாக இருக்கவில்லை.
வினா – இப்போது லகுவான ஒரு வினா. யார் சிறந்த கிரிக்கெட் அணி – இந்தியாவா பாகிஸ்தானா? இரு அணிகளுக்கும் இடையே தீவிரமான போட்டாபோட்டி மைதானத்திலே இருக்கும். நீங்கள் பேசிய புவிசார் அரசியல் அழுத்தங்கள் இருக்கும் வேளையிலே, கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் சிறப்பான உறவுகளை ஏற்படுத்த முடியுமா?
மோதிஜி – அதாவது விளையாட்டுக்கள் என்று பார்த்தால், உலகமெங்கிலும், சக்தியை அளிக்கும் பணியைச் செய்கின்றன. விட்டுக்கொடுக்கும் தகைமை, அனைவரையும் இணைக்கும் பணியை ஆற்றுகின்றது. நான் விளையாட்டுக்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதை விரும்பவில்லை. மனித வளர்ச்சியின் மிக முக்கியமான காரணியாக விளையாட்டுக்களை நான் கருதுகிறேன். விளையாட்டுக்களை, நான் எப்போதுமே ஆதரித்து வந்திருக்கிறேன்.
அடுத்த விஷயம்…. யார் சிறப்பானவர் யார் இல்லை எனும் போது, இதை, விளையாட்டுத் திறனோடு தொடர்பு படுத்தினால், நான் ஒன்றும் வல்லுனர் அல்ல. வல்லுனர் யாரோ, அவரால் மட்டுமே பதில் கூற முடியும், யாருடைய ஆட்டம் சிறப்பு எந்த வீர்ருடைய ஆட்டம் சிறப்பு என்று. ஆனால், விளைவுகளின் மூலம், என்ன தெரிய வருகிறதென்றால், சில நாட்கள் முன்பு தான், இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு ஆட்டம் நடைபெற்றது. அதிலே, கிடைத்த விளைவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம், யார் மேம்பட்ட அணி என்று. அது காட்டிக் கொடுக்கும்.
வினா – நான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மிகப்பெரிய போட்டாபோட்டி புத்தகத்தை பார்த்தேன். அதிலே சில அற்புதமான வீர்ர்கள் அற்புதமான ஆட்டங்கள் பற்றிப் படித்தேன். அதே போலத் தான் கால்பந்தாட்டமும். கால்பந்தாட்டம் இந்தியாவிலே மிகவும் பிரபலமானது. மேலும் ஒரு கடினமான வினா. யார் அனைத்துக் காலங்களுக்குமான மிகச் சிறப்பான கால்பந்தாட்ட வீர்ர்? லயனோல் மெஸ்ஸி, பேலே, மாரடோனா, கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜிடான். யார் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீர்ர் என்று கூறுவீர்கள்?
விடை – நீங்கள் சொல்வது சரிதான் அதாவது பாரத்த்தின் பல இடங்களில் காலபந்தாட்டம், சிறப்பாக விளையாடப் படுகிறது மேலும் கால்பந்தாட்ட்ட்தில் எங்களுடைய, பெண்கள் அணியும் நன்றாகச் செயல்படுகிறது. ஆண்கள் அணியும் நன்கு விளையாடுகிறார்கள். ஆனால் பழைய காலம் பற்றிப் பேசினால், 80கள் காலகட்டம் பற்றி. அப்போது மரடோனாவின் பெயர் எப்போதும் முன்னே வரும். ஒருவேளை அவர் அந்த, தலைமுறையினருக்கு ஒரு, ஹீரோவாக்வும் இருந்திருக்கலாம். இன்றைய தலைமுறையினர் பற்றிக் கேட்டீர்களென்று சொன்னால், மெஸ்ஸி என்று தான் சொல்லுவார்கள். ஆனால் எனக்கு, (சிரிப்பு) சுவாரசியமான சம்பவத்தை நீங்கள் கேட்ட்தால் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் நாட்டிலே, மத்திய பிரதேசம் என்று ஒரு மாநிலம் உண்டு. இந்தியாவின் மத்திய பாகத்திலே. அங்கே ஷஹ்டோல் என்று ஒரு மாவட்டம் உண்டு. அது முழுக்க பழங்குடியினர் பகுதி… நிறைய பழங்குடிகள் வசிக்கிறார்கள். அங்கே சுயவுதவிக் குழுக்களை நட்த்தும் பழங்குடிப் பெண்கள், அங்கே அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன் எனக்கு சுயவுதவிக் குழுக்களோடு பேசுவதில் அதிக நாட்டமுண்டு, சந்திக்கச் சென்றேன். அங்கே நான் கவனித்தேன் சில, விளையாட்டுக்களின் உடைகளை அணிந்த 80-100 இளைஞர்கள், kகுழந்தைகள் சற்று வளர்ந்த பையன்கள் இளைஞர்கள் என இருந்தார்கள்.
அவர்களிடம், நான் இயல்பாகச் சென்றேன். அட எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்ட போது, நாங்கள் மினி ப்ராசிலைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். இந்த மினி ப்ராசில் என்றால் என்ன என்றேன் நான். எங்களுடைய கிராமத்தை மினி ப்ராசில் என்பார்கள் என்றார்கள். எப்படி மினி ப்ராசீல் என்பார்கள் என்றேன் நான். எங்களுடைய கிராமத்திலிருந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் 4 தலைமுறைகளாக, மக்கள் கால்பந்தாட்டம் ஆடுவார்கள். சுமார் 80 தேசிய அளவிலான வீர்ர்கள், எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கிராமம் முழுவதும் கால்பந்தாட்டமே மூச்சாக கொண்டிருக்கிறது.
அவர்கள் கூறினார்கள் எங்கள் கிராமத்தின் வருடாந்திர ஆட்டம் நடக்கும் போது, 20000-30000 பேர்கள் அக்கம்பக்க கிராமங்களிலிருந்து வருவார்கள் என்றார்கள். ஆக, பாரதத்திலே கால்பந்தாட்டம் தொடர்பாக, இப்போது ஆர்வம் அதீகரிக்கிறது. இதை நான் நல்ல அறிகுறியாக காண்கிறேன். இது குழுவுணர்வை நன்கு உருவாக்குகிறது. (சிரிப்பு)