அதிமுக தொண்டர்கள் பொதுவெளியில் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்!

Published:

ops eps - 2026

அதிமுக உடன்பிறப்புகள் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிமுகவின் கூட்டணி வியூகங்கள் குறித்து கழகத் தலைமை மட்டுமே முடிவெடுக்கும். கழக உடன்பிறப்புகள் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அதிமுக அமைத்திருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் நலப் பணிகளை திறம்பட ஆற்றி கழகத்துக்கு பெருமை சேர்க்கும் வேலைகளில் மட்டுமே கழக உடன்பிறப்புகள் இப்போது ஈடுபட வேண்டும். கழகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img