தமிழகத்தில் நாளை நவம்பர் 6ஆம் தேதி மின்தடை ஏற்படவிருக்கும் பகுதிகள் பற்றிய விவரங்களை மின்துறை தெரிவித்துள்ளது
ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளுக்காகவும் தேவையற்ற மரங்களை அகற்றி பணிகளை மேற்கொள்ளவும் மின்வாரியம் மின் விநியோகத்தை தடை செய்கிறது.
காலை 9 மணி முதல் 5 மணி வரை இருக்கும் இந்த மின்தடை ஆனது ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மாதத்தில் ஒரு முறை செய்யப்படுகிறது.
அந்த வகையில் வரும் நவம்பர் 6ஆம் தேதி அதாவது நாளை மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, வீரவநல்லூர், துளுக்கற்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தவிர்த்து கபாலிபாறை, இடைகால் அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாம் கட்டளை, காசிதர்மம், முக்கூடல் மற்றும் சிங்கம்பாறை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் வீரவநல்லூர், அரிகேசவநல்லூர், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம், அம்பாசமுத்திரம், ஊர்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி மாஞ்சோலை மற்றும் ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.