அவினாசி அருகே… கேரள அரசு பஸ் – கண்டெய்னர் லாரிமோதல்: 20 பேர் உயிரிழப்பு!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
ksrct bus accident1 - 2026

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கண்டெய்னர் லாரி – கேரள அரசு பஸ் இரண்டும் மோதிக் கொண்ட கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கிச் சென்றது கேரள அரசு பஸ். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பஸ் சென்றபோது, எதிர்திசையில் கோவையிலிருந்து சேலத்தை நோக்கி டைல்ஸ் கற்கள் பாரம் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு மீது ஏறி, திருவனந்தபுரத்தை நோக்கிச் சென்ற கேரள அரசு பஸ்ஸின் பக்கவாட்டில் மோதி விபத்துஏற்பட்டது.

ksrct bus accident - 2026

இந்த விபத்தில் கேஎஸ்ஆர்டிசி பயணித்த ஓட்டுநர், ஐந்து பெண்கள் என மொத்தம் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களில் 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததை அடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.

கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் கண் அயர்ந்ததன் காரணமாகவே கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தப்பியோடிய கண்டெய்னர் லாரி ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.