ஆர்சனிக் ஆல்பம் 30: நோய் எதிர்ப்பு சக்திக்கு ஹோமியோ மருந்து! மத்திய மாநில அரசு பரிந்துரை!

Published:

ayush

கொரோனா தொற்று பரவுதலை எதிர்த்தும் போராடும் தருணத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளன. இந்த மருந்தை அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள ஹோமியோ மருந்தகங்களில் மக்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழு (ஐஹெச்எம்எல்) வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி ஆகியோரை சந்தித்து, அரசின் ஆணைகள் மற்றும் பரிந்துரை கடிதங்களை இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழுவின் (ஐஹெச்எம்எல்) திருச்சி கிளை நிர்வாகிகள் திங்கள்கிழமை வழங்கி மருந்தை அறிமுகம் செய்து வைத்தனர். திருச்சி கிளையின் செயலர் எஸ். விஜயானந்த், தலைவர் டி. அனுராதா, ஆலோசகர் ஏ. பாலாஜி ஆகியோர், மாவட்ட மக்களுக்கு இந்த மருந்தை தாராளமாக கிடைக்கச் செய்திட வேண்டும் என வலியுறுத்தினர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

இதுதொடர்பாக, மருத்துவர் எஸ். விஜயானந்த் கூறியது:
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவும் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.. இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகளை வைத்து பார்த்த ஆயுஷ் மருதுவத் துறையினர் யில் ஆர்சனிக் ஆல்பம் 30 (arsenic album 30C) என்ற மருந்தை பரிந்துரை செய்துள்ளனர். உருளை மாத்திரைகளை நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் காலை மட்டும் 3 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். 3 நாள்களுக்கு எடுத்துக் கொண்டாலே போதுமானது.

ayush dr 1

இதன் மூலம், சளி, இருமல், நுரையீரல் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும். கொரோனா அறிகுறிகள் இத்தகைய பாதிப்பை கொண்டிருப்பதால் இந்த மருந்தானது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் நோய் கிருமி மனித உடலுக்குள்ளே வரும்போது எதிர்கொள்வதற்கு எதிர்சக்தி கிடைக்கிறது. நோய் தடுப்பு மற்றும் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும். இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. மற்ற மருந்துகளை போன்று ஹோமியோபதி மருந்து ரத்ததில் கலப்பதில்லை.

நரம்பு வழியாக செயல்பட கூடியது இந்த மருந்தை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் பரிந்துரை செய்துள்ளது. கேரளம், குரஜார், ஆந்திரம், மணிப்பூர், புதுதில்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் பரிந்துரை செய்துள்ளன. தமிழக அரசும் அண்மையில் அறிவித்துள்ள. ஆரோக்கியம் திட்டத்தில் இந்த மருந்தை இடம்பெறச் செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள ஹோமியோ மருந்தகங்களில் ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்தை வழங்க வேண்டும்.

ayush tab 1

தனியார் மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்களிலும் இயன்றவரை இந்த மருந்த இலவசமாகவோ, குறைந்த விலைக்கோ வழங்க சங்கத்தின் சார்பில் ஐஹெச்எம்எல் உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலும் இதனை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பை கோரியுள்ளோம் என்றார் அவர்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Related articles

Recent articles

spot_img