கொரோனா: கஸ்டமர் வீட்டுக்கே சென்று கட்டிங் செய்த கடைக்காரர்! பயத்தில் சென்னை!

Published:

romio saloon shop
romio saloon shop

ஊரடங்கு நேரத்தில் எல்லா கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.. பலதொழில்கள் பாதிக்கப்பட்டதால் வருமானம் இன்றி ஏராளமானோர் தவித்து வருகின்றனர். அந்த வகையில் சலூன் கடைகளும் ஒன்று இவர்களுக்கு வருமானம் இழப்பு ஒரு பக்கம் என்றாலும் பொதுமக்கள் கட்டிங், ஷேவிங் இல்லாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

விஜயகாந்த்துக்கு பிரேமலதா ஷேவ் செய்து, டை அடித்து விட்டது போல, முடிந்தவரை சிலர் வீடுகளுக்குள்ளேயே இதை செய்து கொள்கின்றனர்.. அதற்கு குடும்ப உறுப்பினர்களும் உதவுகின்றனர்.. ஆனால் ஷேப், கட்டிங் செய்ய தெரியாதவர்கள் நிலை படு திண்டாட்டமானது.

சலூன் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் சென்னையை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர் கோயம்பேடு பகுதியில் கடையை திறந்து கஸ்டமர்களுக்கு முடி வெட்ட ஆரம்பித்துவிட்டார். தற்போது இந்த சலூன கடைக்காரரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. இந்த கடை மார்க்கெட்டில் இருக்கிறதாம்.. அதனால் மக்களுக்கு பீதி கிளம்பி உள்ளது..

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!
salun
s

இவருக்கு 4 நாட்களுக்கு முன்பு தொற்று நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது… இவர் யார் யாருக்கெல்லாம் முடி வெட்டினார் என்று தெரியவில்லை.. அதனால் கடைக்கு வந்து முடி வெட்டிய வாடிக்கையாளர்கள் எல்லாரையும் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.. அவரது கடையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்கள் முடிவெட்ட, சவரம் செய்ய வந்து போனதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லை.. கடைக்கு வரும் கஸ்டமர்கள் இல்லாமல், அச்சத்தால் வெளியே வர வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நபர்களுக்கும் முடி வெட்டி உள்ளார்.. அவர்களது வீடுகளுக்கே சென்று கட்டிங் செய்துவிட்டு வந்திருக்கிறார்.. தினமும் இப்படி பத்து பேர்களுக்கு வீடுகளுக்கே 14 நாட்களாக சென்று இவர் முடிவெட்டி உள்ளாராம்.. அதனால் அவர்களையும் தனிமைப்படுத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்… அந்த வீடுகளில் வேறு யார் யார் இருந்தார்களோ, அவர்களையும் தனிமைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் சலூன் கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்க வேண்டும் என அரசு அறிவுறுத்திய நிலையில், சலூன் கடையை இவர் திறந்து வைத்தது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img