
- #திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் காவல் துறையினரை கண்டித்து முஸ்லீம்கள் திடீர் ஆர்ப்பாட்டம்…
- மாலை நேரத்தில் வடை,போண்டா கடையை மூட வேண்டும் என காவல் துறையினர் சொன்னதால் கொந்தளிப்பான இஸ்லாமியர்கள்…
- மேலும் நோன்பு கஞ்சி காய்ச்சி வழங்குவதற்கும் அனுமதி வேண்டுமாம்…
திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் பஜ்ஜி கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பெரிய தோட்டம் கட்டுப்பாட்டு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு உள்ள சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீசார் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். இந்த கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பெரிய தோட்டம் மெயின் வீதியில் நேற்று மாலை பஜ்ஜி போண்டா கடை ஒன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. அங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் நின்று பஜ்ஜிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கே கடையை திறந்து செயல்படுத்த அனுமதி இல்லை என்றும் தேவையில்லாமல் கூட்டம் கூடும் என்பதால் உடனடியாக கடையை மூடவேண்டும் என்றும் போலீசார் கூறினர்.

கட்டுப்பாட்டுப் பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது என்று போலீசார் அவர்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
நோன்பு திறக்கும் நேரத்தில் பஜ்ஜி கடையை மூட அனுமதிக்க மாட்டோம் என்றும் பெரிய தோட்டம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டனர் என்பதால் இந்தப்பகுதியை கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், நோன்புக்கஞ்சி காய்ச்சுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அங்கே திரண்ட முஸ்லிம் மக்கள் போலீசாரிடம் வற்புறுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உதவி ஆணையர் நவீன் குமார் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர்தான் நடவடிக்கையை மேற்கொள்வார் என்றும் கூறி அங்கிருந்து அனைவரையும் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது!

