இன்று சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா! உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு!

Published:

tamilnaducorona
tamilnaducorona

இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கையில் தற்போது கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1611 என்றும், இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்றுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 3023 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 187 பேர் ஆண்கள் மற்றும் 79 பேர் பெண்கள். இன்று மட்டும் 10 ஆயிரத்து 617 மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுவரை ஒரு லட்சத்தி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தோற்று சோதனை மையங்கள் அரசு தரப்பில் 35ம் தனியார் தரப்பில் 14ம் ஆக 49 மையங்கள் உள்ளன. இதுவரை வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 206 அரசு தனிமைப்படுத்தல் மையங்களில் 40-பேர் உள்ளனர்

இன்று 38 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்தம் 1,379 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

corona color zone may 3
corona color zone may 3

இன்று ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 203 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1458 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

சென்னையை அடுத்து அதிகபட்சமாக இன்று விழுப்புரத்தில் 33 பேருக்கும் கள்ளக்குறிச்சியில் ஆறு பேருக்கும் கடலூரில் 9 பேருக்கும் கோவையில் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அரியலூர், மதுரை, தென்காசி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கும் திருவண்ணாமலை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து பச்சை மண்டலத்தில் நீடிக்கிறது.

Related articles

Recent articles

spot_img