கொரோனா: மருந்து கண்டு பிடிக்கும் முயற்சி செய்த ஒருவர் உயிரிழப்பு!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
dr lab 1 - 2026

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சென்னையில் தனியார் மருந்து நிறுவன அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த பெருங்குடி சிவநேசன் என்பவர் தான் இந்த விபரீத முயற்சியில் உயிரை பறிகொடுத்தவர் ஆவார்.

சென்னை திநகரில் டாக்டர் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பர் பெருங்குடி சிவநேசன், உத்தராகண்ட் மாநிலம் காசிப்பூர் என்ற இடத்தில் சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தின் புரோடக்சன் மேனேஜராக 27 வருடமாக பணிபுரிந்து வந்தார். இவர் சளி மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்தவர் என கூறப்படுகிறது.

இவர் தற்போது கொரோனாவுக்கு மருந்து கண்டிபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதாக தெரிகிறது. சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்தால் கொரானா நோயை கட்டுப்படுத்தும் என கூறி கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.திநகரில் உள்ள டாக்டர் ராஜ்குமார் வீட்டில் நேற்று சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது சோடியம் நைட்ரேட் கரைசலை பரிசோதனைக்காக சிவநேசன் குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்திலேயே மயக்க அடைந்த அவரை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவநேசன் உயிரிழந்தார். இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.