துணை முதல்வர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
ops panneerselvam

ஆஞ்சியோ சிகிச்சைக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை தந்துள்ளது.

ஏற்கனவே அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. 2018-ல் கோவை கணமதி காந்திமாநகர் பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் முதுகுவலிக்கு சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார்.

அங்கு அவருக்கு ஆயில் மசாஜ், ஸ்டீம் பாத், எண்ணெய் குளியல் உள்பட பல்வேறு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சைகள் தரப்பட்டன. இதற்காக ஒரு வாரம், 5 நாட்கள் என பலமுறை கோவை ஆஸ்பத்திரிக்கும் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. என்ன உடம்புக்கு என்று தெரியவில்லை. ஆஞ்சியோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாக்டர்கள் அவருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய தினம் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை கொரோனா தடுப்பு குறித்த முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது கவலையை தந்துள்ளது. எனினும் சிகிச்சை முடிந்து சீக்கிரத்திலேயே வீடு திரும்புவார் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.