புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் சப்-கலெக்டர் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்
தற்போது மத்திய மாநில அரசின் வழிகாட்டுதலோடு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது அவ்வாறு செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களான ஜவுளிக்கடை சூப்பர் மார்க்கெட் மற்றும் தள்ளுவண்டி வியாபாரக் கடைகள் தேநீர் கடைகள் போன்றவற்றினை அறந்தாங்கி சப் கலெக்டர் ஆனந்த் மோகன் ஆய்வு செய்து அங்கு பணி புரியும் ஊழியர்கள் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா என்பது குறித்தும் வணிக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு வணிக நிறுவனங்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் தெரிவித்தார்
அப்போது அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்
