சிவாஜி தோற்றார்; கமலுக்கு ஜெயிக்கும் ரகசியம் தெரிகிறது: ரஜினி

Published:

சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை இன்று காலை திறந்து வைத்தார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதன் பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நடை, உடை பாவனையில் புரட்சியை உண்டாக்கியவர் சிவாஜி என்று புகழ்ந்தார்.

பின்னர், சிவாஜி மணிமண்டபத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாக்கியசாலி என்று கூறிய ரஜினி காந்த், கமலுக்கு அரசியல் தெரிகிறது, எனக்கு தெரியவில்லை. அரசியலில் வெற்றி பெற சினிமா செல்வாக்கு மட்டும் போதாது.

அரசியலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும், எனக்கு தெரியாது. அரசியலில் சிவாஜியின் தோல்வி அவரது தொகுதி மக்களுக்கான தோல்வி. அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் கமலுக்கு தெரிகிறது, இரு மாதங்களுக்கு முன்னால் கேட்டால் அந்த ரகசியம் என்னவென்று சொல்லியிருப்பார். தற்போது கேட்டால் என்னுடன் சேர்ந்து வா ரகசியம் சொல்கிறேன் என்கிறார் கமல்” என்று பேசினார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img