திருச்சி அருகே கோர விபத்து 10 பேர் பலி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி

திருச்சியை அடுத்த துவரங்குறிச்சி அருகே நின்று கொண்டு இருந்த போர்வெல் லாரி மீது நாகர்கோவிலிலிருந்து திருப்பதி சென்ற வேன் மோதியது.

இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலியாயினர் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது பின்புறத்தில் வந்த டெம்போ வேன் மோதிய விபத்தில் 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு. போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி – மதுரை நெடுஞ்சாலையின் ஓரத்தில் புதன்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் போர்வெல் லாரி ஒன்று நின்றுள்ளது. அதுசமயம் நாகர்கோவில் தெற்கு குளம் பகுதியிலிருந்து திருப்பதி நோக்கி சென்றுகொண்டிருந்த டெம்போ வேன் ஒன்று எதிர்பாரத நிலையில் நின்று கொண்டிருந்த போர்வெல் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியுள்ளது. இதில் வேன் முன்பகுதி முழுவதும் நசுங்கிய நிலையில் லாரியில் மாட்டிகொண்டது. வேனில் 5 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளுடன் சிக்கி கொண்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த துவரங்குறிச்சி போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பொக்லைன் இயந்திரம் உதவி கொண்டு வேனின் பகுதிகளை உடைத்து நசுங்கி இருந்த வேனில் சிக்கிய இருந்தவர்கள் வெளியே கொண்டு வந்தனர். அதில் 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 சிறுவர் சிறுமியர்கள் என 10 பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிகழ்விடத்துக்கு திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் கல்யாண் மற்றும் மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

படுகாயம் அடைந்த வைஷ்ணவி ( 21 ), தனம்மாள் ( 42 ), வேளாதேவி ( 35 ), கார்த்தி ( 12 ), டிரைவர் ராகேஷ் ( 37 ), ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண் நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.