மணல் கொள்ளையரை தடுத்த துணை தாசில்தாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

Published:

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் அதிகாரியை தாக்கிய மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் போராட்டம்  நடத்தினர்.

கடையநல்லூரில் தற்போது கனமழை காரணமாக ஆறுகளில் தேவையான அளவு மணல்  சேகரமாகி உள்ளது. இதனைப் பாதுகாக்கும் விதத்தில் உதவி தாசில்தார்
மேலக்கடையநல்லூர் வழியாக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூன்று மோட்டார் சைக்களில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது திடீர் என தெரு விளக்குகள் அணைந்தது. அப்போது தெருக்களுக்குள் நுழைந்த இவர்களை திருடர்கள் என நினைத்து அந்தப் பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது நாங்கள் மணல் கடத்தும் கும்பலை பிடிக்கும் வருவாய் துறை துணை தாசில்தார் என சொல்லியும் அவர்களை சிறைபிடித்து தாக்கினர்.

இது குறித்து தகவல் தெரிந்த கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் கோவிந்தன், தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வருவாய்துறையினரை மீட்டனர்.

துணைதாசில்தார் ஏசுராஜன் புகாரின் பேரில் மேலக்கடையநல்லூரை சார்ந்த 11நபர்கள் மீது வழக்கு பதிந்தது இதில் கணேசன் (48)ராமர்(38) சேதுராமன் (41)வேலுச்சாமி (64) ஆகிய நான்கு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. மீதி நபர்களை காவல்துறை தேடிவரும் நிலையில் இன்று மலை 6 மணிக்கு கடையநல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு மணல் கொள்ளையை தடுக்க முயன்ற வருவாய் அதிகாரியை தாக்கிய மணல் கொள்ளையர்கள் அனைவரையும் விரைவாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் தமிழ்நாடு கிராம உதவியாளர் அலுவலர் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img