இன்னும் 3 நாட்களில் நிச்சயதார்த்தம்! 2ஆம் நிலை காவலர் காட்டுக்குள் மர்ம மரணம்!

puvarasan-1
puvarasan-1

மூன்று நாட்களில் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் ஏலகிரிமலை வனப்பகுதியில் நேற்று 2-ம் நிலை காவலர் உடல் மீட்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஊசி நாட்டான் வட்டத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முரளி (59). இவருக்கு 3 மகன்கள். இதில், மூத்த மகன் பூவரசன் (24). கடந்த ஆண்டு நடைபெற்ற 2-ம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சிப்பெற்று கோவையில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி முடித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் காவல் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், உறவினர் திரு மணத்துக்காக கடந்த மாதம் 31-ம் தேதி சொந்த ஊருக்கு பூவரசன் வந்தார். இதைத்தொடர்ந்து, பூவரசனுக்கும் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து தங்களது விருப்பத்தை பூவரசனிடம் தெரிவித்தனர்.

அப்போது, ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக தான் காதலித்து வரு வதாகவும், அந்த பெண்ணும் கோவையில் தங்கி வேலை செய்து வருவதாகக் கூறி அதே பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாக தனது பெற்றோரிடம் பூவரசன் தெரிவித்தார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த பூவரசன் பெற்றோர், உடனடியாக அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பூவரசனுக்கு பெண் கேட்டனர். இதைத்தொடர்ந்து, இரு வீட்டாரும் கலந்து பேசி, வரும் 8-ம் தேதி (திங்கள்கிழமை) திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இரு வீட்டாரும் திருமண நிச்சயதார்த்ததுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்நிலையில், பொன்னேரிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு பூவரசன் நேற்று முன்தினம் காலை தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பூவரசனின் குடும்பத்தார் அவரை பல இடங் களில் தேடினர். அவரது செல்போன் எண்ணுக்கு முயற்சி செய்த போது, அது அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, சந்தேக மடைந்த பூவரசனின் பெற்றோர் ஏலகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பூவரசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ஏலகிரி மலை அத்தனாவூர் அடுத்த ராமகிருஷ்ணாமடம் அருகே உள்ள வாரக்கொட்டை பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத வனப் பகுதியில் இரு சக்கர வாகனம் ஒன்று தனியாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, ஏலகிரி காவல் உதவி ஆய்வாளர் தங்க ராஜ் தலைமையிலான காவல் துறையினர் வாரக்கொட்டை பகுதிக்கு சென்று பார்த்தபோது, அந்த வாகனம் 2-ம் நிலை காவலர் பூவரசனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. உடனே, வனப்பகுதியில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

அப்போது இரு சக்கர வாகனம் இருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப் பகுதியில் பூவரசன் உயிரிழந்த நிலையில் இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து, அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூவரசன் உடல் கண்டெடுக் கப்பட்ட இடத்தில் காலி மது பாட்டில் மற்றும் விஷபாட்டில் இருப்பதையும் காவல் துறையினர் கண்டெடுத்தனர். 3 நாட்களில் திருமண நிச்சயதார்த்தம் நடை பெற இருந்த நிலையில், காவலர் பூவரசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது திருமணத்தில் விருப்பம் இல்லாதவர்கள் யாராவது அவரை தனியாக அழைத்து வந்து மதுவில் விஷம் கலந்து கொடுத்து, அவரை கொலை செய்துள்ளார்களா? என்பது குறித்து ஏலகிரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories