இன்று மாலை 6 மணி கெடு! ஆ.ராசா பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published:

rasa - 2026

முதலமைச்சர் பழனிசாமி குறித்த ஆபாசமான அருவருக்கத்தக்க அவதூறுப் பேச்சு குறித்து இன்று மாலை 6 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுக எம்.பி ஆ.ராசா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, முதல்வரைக் குறித்து தரக்குறைவாகப் பேசினார். ஆ.ராசாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் தரக்குறைவாக பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடாத வகையில் நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்தது.

மேலும், தாராபுரம் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து இழிவாகப் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி குறித்த பேச்சு பற்றி ஆ.ராசா இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆ.ராசா பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!
election commission notice1 - 2026
election commission notice2 - 2026

Related articles

Recent articles

spot_img