பணி நிமித்தம் 10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் ரயில்கள்! பயணிகள் அவதி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை
train 1 - 2026

சென்னையில் இருந்து தென்தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் செல்லும் வழியில் பல இடங்களில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த பணியால் ரயில்கள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். அதாவது, மதுரை திருமங்கலம் அருகே இரட்டை ரயில் பாதை பணியை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் அந்த வழியில் வந்த ரயில்கள் 10 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் முத்துநகர், பொதிகை, கன்னியாகுமரி, கொல்லம் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ரெயில்கள் திருமங்கலம், திருப்பரங்குன்றம், கூடல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 மணி நேரமாக நிற்பதால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். விரைவில் பணிகளை முடித்து ரயில்கள் இயக்கத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.