குப்பையில் கிடந்த ரூ.58000! உரியவரிடம் ஒப்படைத்த குப்பை சேகரிக்கும் பெண்!

Published:

nellai 1
nellai 1

நெல்லை மாவட்டத்தில் குப்பை சேகரித்து வாழ்க்கை நடத்தும் இளம்பெண் ஒருவர் கீழே கிடந்த 58 ஆயிரம் ரூபாய் பணத்தையும் விலை உயர்ந்த செல்போனையும் உரியவரிடம் ஒப்படைத்தார்.

recovery
recovery

பாப்பாக்குடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தெருவைச் சேர்ந்த மாரியம்மாள், சேரன்மகாதேவி பகுதியில் சேகரித்த பழைய பொருள்களை முக்கூடலில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் கொட்டி தரம் பிரித்துக் கொண்டிருந்தார். அந்தக் கழிவுகளோடு ஒரு பர்சும் இருந்துள்ளது. அதைப் பிரித்துப் பார்த்த போது, ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

nellai
nellai

அதை பரிசோதித்த போலீசார், 58 ஆயிரத்து 210 ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனுடன் ஆதார் அட்டையும் இருந்ததால், உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.

முக்கூடல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் காவுராஜன் மாரியம்மாள் நேர்மையைப் பாராட்டி, குத்துவிளக்கு ஒன்றை பரிசளித்தார்.

Related articles

Recent articles

spot_img