நாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு!

Published:

dog 3 - 2026

பூந்தமல்லி அருகே வெறி நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி 7 வயது உயிரிழந்த சிறுவன்.

பூந்தமல்லி அடுத்த அகரமேல் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் அந்த வழியாக சென்ற சிறுவர்கள் சிலரை கடித்து குதறியது இதில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலர் ரேபீஸ் நோய் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசிகளைச் எடுத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் இவரது மகன் மோனிஷ் 7 வயதான சிறுவனையும் அந்த வெறிநாய் கடித்து குதறியதில் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்தான். இதையடுத்து அவரது பெற்றோர் சிறுவனுக்கு தடுப்பூசி ஏதும் போடாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு சிறுவனுக்கு திடீரென நாயை போன்று நாக்கில் இருந்து எச்சில் ஊற்றியதாகவும், தண்ணீரை கண்டால் ஓடுவது உள்ளிட்ட சுபாவங்கள் நாயை போல் மாறியதையடுத்து பயந்து போன பெற்றோர் மோனீசை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மோனிஷ் ரேபிஸ் நோய் தாக்கி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

இந்த சம்பவத்தை அடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் சிறுவன் யாருடன் எல்லாம் பழகினார் என கணக்கெடுத்து அவர்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஏனென்றால் சிறுவனின் எச்சில் பட்டால் அவர்களுக்கும் ரேபீஸ் நோய் பரவும் என்பதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img