சென்னை விமான நிலைய பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

சென்னை:

சென்னை உள்நாட்டு விமான நிலைய பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் விமான நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை விமானநிலைய 4வது நுழைவு வாயில் அருகே உள்ள பாலத்தில் இருந்து அந்த இளைஞர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த இளைஞர் யார் என அடையாளம் காணப்படவில்லை. அவரது தற்கொலைக்கான காரணமும் தெரிய வரவில்லை.

சம்பவம் குறித்து அறிந்ததும் உடனடியாக விரைந்த போலீஸார், அந்த இளைஞர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர் ஏன் விமான நிலையத்துக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.