தீயில் கருகாத நந்தி மாலை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

மதுரை ஶ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நிகழ்ந்த தீ விபத்து… சோக நிகழ்வுகள்.

ஆயிரங்கால் மண்டபத்திற்கு தென்புறத்தில்,சுவாமி சன்னதிக்கு எதிரில் அமைந்திருக்கும் ” வீர வசந்தராயர் மண்டபம்” (400 ஆண்டுகள் பழமையானது) கடைகளில் பிடித்த நெருப்பு பரவி கிட்டத்தட்ட 35கடைகள் முழுவதும் எரிந்து போனது. அதன் வெப்பம் தாங்காமல் மேற்கூரை கற்களும், சுவர்களும் பல இடங்களில் இடிந்து விழுந்துள்ளன.

கட்டிட வல்லுனர்களின் ஆய்வுக்குப் பிறகு தான் மீதம் இருப்பதன் உறுதித் தன்மை தெரிய வரும்.

இவ்வளவு பெரிய சோகத்திலும், சுற்றிலும் தீ எரிந்து கொண்டிருக்கும் போதும் “தொட்டி- நந்தி” ‘க்கு எவ்வித சேதாரமும் இன்றி… அணிவித்திருந்த மாலைகள் கூட வாடாமல் இருந்தது தான் ஆச்சரியம், அற்புதம்.

இறைவன் ஏதோ ஒரு செய்தியை இப்படி அசம்பாவிதங்கள் முலம் தெரிவிக்கிறார். ஆனால் அதை உணர்வதற்கான ஞானம் எப்போது வருமோ?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.