ஸ்ரீஜயேந்திரருக்கு அஞ்சலி செலுத்திய இஸ்லாமியர்கள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மகா சமாதி அடைந்தார். அவரது பூதவுடலுக்கு காஞ்சி சங்கரமடம் அருகே உள்ள பள்ளிவாசலிலிருந்து வந்த எராளமான இஸ்லாமியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

காஞ்சி மடத்தின் 68 வது பீடாதிபதியாகத் திகழ்ந்த மகாபெரியவர் என்று அன்பர்களால் அழைக்கப் பட்ட ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலம் தொட்டு, காஞ்சி மடத்துக்கு அருகே உள்ள பள்ளிவாசலில் இருந்து இஸ்லாமியப் பெரியவர்கள் மடத்துடன் நல்லுறவைப் பேணி வருகிறார்கள். மகா பெரியவர் காலத்துக்குப் பின்னர், காஞ்சிப் பெரியவர் என்று போற்றப் பட்ட ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அனைத்து தரப்பினருடனும் நட்புறவு பேணி வந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.