மொழிப்போர் நிகழ்வுகளை மறந்துவிட முடியாது: ம.நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

m k stalin dmk - 2026

சென்னை: திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார் ம.நடராசன். மொழிப்போர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்று சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் ம.நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வந்த திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசனுக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் பல்லுறுப்புகள் செயலிழந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சென்னையை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கே அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் அவருக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து, தஞ்சையில் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் இருந்து கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.

இதன் பின்னர் உடல்நிலை தேறி வந்த நிலையில், சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் நடராசன். அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையை பரிசோதித்து வந்தார். அவருக்கு சனிக்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவர் உடனே குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப் பட்டார். அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதனால் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நடராஜன் இன்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.

மறைந்த ம.நடராசன் உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

தலைவர்கள் பலர் இரங்கல் செய்தி வெளியிட்டனர். ம.நடராஜன் மறைவுக்கு, தி.க.தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா, புகழேந்தி, வேல்முருகன், சுப.வீரபாண்டியன், இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories