கோவை: கோவையில் நடக்கவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்த அக் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கோவைக்கு வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் இலவச வேஷ்டி- சேலை மற்றும் பொங்கல் பரிசுகள் நிறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு நிறுத்தப்பட்டிருப்பதற்கு காரணம் என்ன ? மானியத்தை நிறுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது, இதனைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே செயல்படுத்த, தமிழக அரசு நடக்கிறதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் அரசு ஊழியர்கள் சிலர் மத பிரசாரத்தில் ஈடுபடுவதாக கேள்விப்பட்டேன். இது தவறானது. அரசு ஊழியர்கள் யாரும் மத பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறினார்.

