போதை மாத்திரைகள் விற்பனை! காவல் துறையினர் பறிமுதல்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் திருச்சி
drugs - 2026

திருச்சியில் அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறையினர். இந்த அதிரடி நடவடிக்கையால் 26000 போதை மாத்திரைகளை கைப்பற்றினர். மேலும் போதை மாத்திரை வைத்திருந்த நபரை விசாரித்து வருகின்றனர்.

திருச்சியில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் போதை பொருட்கள் விற்பனைப்பற்றயும், மாத்திரைகளை உடைத்து தூளாக்கி அதனை ஊசி மூலம் உடலில் செலுத்தி கொள்வது போன்ற தகவல்கள் வந்து கொண்டிருந்தது.

இதனை கவனித்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தனிப்படை ஒன்றை அமைக்க கூறி காவல்துறை துணை ஆணையர் சக்திவேலுக்கு உத்தரவிட்டார்.

இதன்படி நடவடிக்கையை மேற்கொண்ட தனிப்படை, போதை மாத்திரை விற்பவர்கள் பற்றி தேட ஆரம்பித்தனர்.
பின் திருச்சி பகுதியை சேர்ந்த சக்திதாசன் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

26000 போதை பொருட்கள் பறிமுதல்.
அப்பொழுது அவர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த கடைக்கு ஐந்து வருடங்கள் நடத்தும் உரிமம் இருந்தும் சக்திதாசன் 2 வருடம் மட்டுமே கடையை நடத்தி வந்துள்ளார்.

அதன் பின் அந்த கடையின் மூலம் பல போதை தன்மை உள்ள மருந்து மாத்திரைகளை வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்த விற்பனையை பல இடத்திற்கு விநியோகம் செய்து வந்துள்ளதாக விசாரணையில் கூறியுள்ளார், இவரிடமிருந்து இளைஞர்கள் நேரடியாக போதை பொருட்களை வாங்க வருவார்களாம், அத்துடன் பல மாவட்டங்களுக்கும் இவர் வழங்கி வருவதாகவும் விசாரணையின் போது கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவரிடம் இருந்து 26,000 போதை மாத்திரைகள் அதாவது 70 பெட்டிகளில் 26000 மாத்திரைகள் மற்றும் உடலில் நேரடியாக செலுத்தும் மருந்துகள் போன்றவற்றை மலைக்கோட்டை மற்றும் ஜீவா நகர் பகுதியில் உள்ள குடோனில் இருந்து காவல் துறையினர்.பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.